மெயின் ரோடு, புறா **** ! என்னை பற்றி பேச என்ன தகுதி இருக்கு..? என்னங்க புகழேந்தி இப்படி பேசிட்டாரு?
சென்னை : தன்னை விமர்சிப்பதற்கு அதிமுக மூத்த நிர்வாகியான ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஓபிஎஸ் சந்தித்தது குறித்து நேற்று பேசி இருந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியுமான ஜெயக்குமார்.
தனது பேச்சினிடையே பெங்களூர் புகழேந்தியை கடுமையாக விமர்சித்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், " பெங்களூர் புகழேந்தி ஒரு மேய்க்கால் புறம்போக்கு" எனவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கலாமா என விமர்சித்திருந்தார்.

பெங்களூர் புகழேந்தி
மேலும்,கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும், அதில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். அப்படியிருக்கும்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஓபிஎஸ் சந்திக்கலாமா? அப்படி என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்க்கு ஒரு சட்டம் மற்றவர்க்கு ஒரு சட்டமா? எடப்பாடி பழனிச்சாமி அதுபோன்று நடந்து கொண்டாரா" என கேட்டிருந்தார்.

கடும் விமர்சனம்
ஜெயக்குமாரின் இந்த பதிலால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி," ஜெயக்குமார் என்னை புரோக்கர் என விமர்சித்து இருக்கிறார். இந்த புரோக்கர் தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா சிறையில் இருந்தபோது ஜாமீன் கொடுத்து வெளியே வருவதற்கு காரணமாக இருந்தவர். பெங்களூரில் ஏராளமான சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார்கள் ஆனால் ஒருவரும் வரவில்லை. புகழேந்தி தான் கொடுத்தேன்.

தகுதி இல்லை
என்னைப் பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை. எங்களுக்கு தலைவர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மட்டுமே என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. சட்ட ஆலோசகர் உடன் பலவற்றை பேசினாலும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நகர கழகங்கள் ஒன்றிய கழகங்கள் உள்ளிட்ட பட்டி தொட்டி எங்கும் பெட்டியை வைத்து வாக்கு கேட்டால் தெரிந்துவிடும். தொண்டர்களும் மக்களும் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.

என்ன தவறு செய்தார்?
கட்சி உடைய வேண்டாம் கட்சித் தொண்டர்கள் ரத்தம் சிந்த வேண்டாம். தொண்டர்கள் தெருவில் நிற்க வேண்டாம் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் ஓபிஎஸ் அமைதி காக்கிறார். திரும்பத் திரும்பக் கேட்கிறேன் ஓபிஎஸ் என்ன தவறு செய்தார். துரோகம் நயவஞ்சகம் செய்த கே.பி.முனுசாமியிலிருந்து ஜெயக்குமார் வரை ஒருவர் கூட பதில் சொல்ல முடியாது. கட்சிக்காக அனைத்து தியாகங்களையும் செய்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார், முதலமைச்சர், முதலமைச்சர் வேட்பாளர், என எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த அவர் என்ன தவறு செய்தார்" என ஆவேசமாக பேசினார்.












Click it and Unblock the Notifications