"பச்சோந்தி" அரசியல்வாதி கேபி.முனுசாமி! அடுத்து எடப்பாடியை அழிக்க போறாரு.. சீறும் பெங்களூர் புகழேந்தி
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தைக் கடுமையாக விமர்சித்து கேபி.முனுசாமி பேட்டி அளித்து இருந்த நிலையில், அதற்குப் பெங்களூர் புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபுறம் பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
அதேநேரம் மறுபுறம் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி மிகக் கடுமையாகச் சாடி விமர்சித்து வருகின்றனர்.

கே.பி.முனுசாமி
எடப்பாடி ஆதரவாளரான கே.பி.முனுசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஓபிஎஸை கடுமையாகச் சாடி இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்று விமர்சித்தார். ஓபிஎஸை சுயநலக்காரர் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா மறைவிற்குப் பின், சசிகலாவையும் குடும்பத்தினரையும் எந்த சூழ்நிலையிலும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்ற ஓபிஎஸ் இப்போது மாற்றிப் பேசுவதாகவும் ஓபிஎஸ் சுய சிந்தனை இல்லாதவர் என்றும் சாடியிருந்தார்

பெங்களூர் புகழேந்தி
இந்நிலையில், இதற்குப் பெங்களூர் புகழேந்தி மிகக் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் புகழேந்தி, "அரசியலில் நிறம் மாறும் பச்சோந்திகள் ஏகப்பட்ட பேர் உண்டு.. அதில் ஒரு பச்சோந்தி தான் கே.பி. முனுசாமி. இவர் தியாகத்தைப் பற்றிப் பேசுகிறார். அதிமுகவுக்காக எத்தனையோ பேர் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர்.

என்ன சொன்னார் தெரியுமா
பலர் அதிமுகவுக்காக ரத்தம் சிந்தி உள்ளனர். இவர் கழகத்திற்கு என்ன செய்துள்ளார். இதே முனுசாமி ஓபிஎஸ் உடன் இருந்த போது, ஓபிஎஸை புகழ்ந்து தள்ளியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். ஒபிஎஸை போல ஒரு தலைவரைப் பார்க்க முடியாது என்றும் தமிழகத்தில் எந்த தொகுதியில் ஓபிஎஸ் நின்றாலும் வெற்றி பெறுவார் என்றும் சொன்னவர் தான் முனுசாமி. மேலும், எடப்பாடி பழனிசாமிக்குத் துணிச்சல் இருக்கிறதா என்றெல்லாம் கூட கேட்டு இருந்தார்.

ஜெயலலிதாவை ஏமாற்றியவர்
ஆனால், இப்போது எடப்பாடி அணிக்கு சென்ற அவர், அதே டயலாக்கை எடப்பாடி பழனிசாமிக்காகப் பேசி வருகிறார். தியாகம் பற்றிப் பேசுகிறீர்களே முதலில் நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள் எனச் சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகளாகக் கிருஷ்ணகிரி நிர்வாகிகளை அடக்கி ஆண்டு ஏமாற்றி வருகிறீர்கள், ஜெயலலிதாவை ஏமாற்றிச் சம்பாதித்தவர் நீங்கள். இப்போது செட்டில் ஆகிவிட்டீர்கள்.

அரசியல் பச்சோந்தி
அமைச்சராக இருக்கும்போது உங்களுக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவர் ஓபிஎஸ். நிறம் மாறும் அரசியல் பச்சோந்திகளில் முதன்மையானவர் கேபி.முனுசாமி, உங்களுக்கெல்லாம் ஓபிஎஸை பற்றிப் பேசத் தகுதி இல்லை . நீங்கள் இப்போது எடப்பாடி பக்கம் நின்று உள்ளீர்கள். சீக்கிரம் அவரை அழித்துவிடுவீர்கள். அந்த வேலையை முதலில் பாருங்கள். அனாவசியமாக ஓபிஎஸ் பற்றி எல்லாம் பேசாதீர்கள்" என்று கடுமையாகத் தாக்கி பேசினார்.
-
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications