டபுள் ராஜயோகம்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டம் உச்சம்
ராஜயோகம்: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் கிரக சேர்க்கைகள் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், சூரியன் மிதுன ராசியில் சஞ்சரித்து அங்கு ஆட்சி பெற்றிருக்கும் புதனுடன் இணைந்ததால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதனுடன் புதன் தனது சொந்த ராசியில் இருப்பதால் பத்ர ராஜயோகம் உருவாகியிருப்பதும் இந்த காலகட்டத்தை மேலும் சிறப்பாக்குகிறது.
இந்த இரண்டு சுப யோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம், அரசு தொடர்பான செயல்கள், சமூக மரியாதை மற்றும் அதிர்ஷ்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணையும் போது உருவாகும் யோகம் புதாதித்ய யோகம் எனப்படுகிறது. இந்த யோகம் அறிவுத் திறன், பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் திறன் மற்றும் நிர்வாக திறனை அதிகரிக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அதேபோல, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் இருப்பதால் பத்ர ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் கல்வி, தொழில், வியாபாரம், தகவல் தொடர்பு மற்றும் நிதி வளர்ச்சிக்கு சாதகமானதாக கருதப்படுகிறது. 2 யோகங்களால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் இந்த யோகம் அமைவதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். நிதி நிலை மேம்படும். பெரியவர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு உதவும். ஆன்மிக பயணம் அல்லது நீண்ட தூரப் பயணங்களுக்கும் வாய்ப்பு அமையலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் கூட்டாண்மை மற்றும் திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தரும். வாழ்க்கைத்துணையுடன் புரிதல் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகள் மூலம் லாபம் கிடைக்கலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். குடும்ப உறவுகளின் ஆதரவும் அதிகரிக்கக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நிதி முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. புதிய வருமான வழிகள் உருவாகலாம். நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். குடும்பத்தின் மூத்தவர்களின் ஆதரவும் கிடைக்கக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமான பலன்களை வழங்கக்கூடியதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு மற்றும் ஆதரவு கிடைக்கலாம். தொழிலில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். சமூகத்தில் செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான முன்னேற்றங்கள் கிடைக்கலாம். வருமானம் உயர்ந்து நிதி நிலை வலுவடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். அரசு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். புதிய வேலை வாய்ப்பு அல்லது புதிய தொழில் திட்டத்தை தொடங்கும் சூழல் உருவாகும். சமூகத்தில் மதிப்பும் உயரக்கூடும்.












Click it and Unblock the Notifications