"பாக்யராஜ் மறைவு... சுஹாசினி சிரிச்சுக்கிட்டே சொன்ன வார்த்தை?" திட்டும் ரசிகர்கள்.. அவர் பேசியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநரும் நடிகருமான திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் காலை நடைப்பயிற்சி முடித்து வீட்டிற்கு வந்த அவர், திடீரென நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து அவரது இல்லத்தில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுஹாசினி பேட்டி

நடிகை சுஹாசினியும் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சுஹாசினி பேசும்போது, "நேற்று முன்தினம் கோவாவில் குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணத்தில் பாக்யராஜ் சார் குடும்பத்துடன் கலந்து கொண்டார். எல்லோரிடமும் சிரித்துப் பேசினார். நாங்கள் நேற்று மாலைதான் சென்னை வந்தோம். அதற்குள் இப்படி ஒரு செய்தி வரும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை." என்று கூறினார்.

மேலும், "இன்று காலை கூட வழக்கம்போல் வாக்கிங் போயிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும் நெஞ்சு வலிக்குது என்று சொன்னாராம். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் கடைசி வரை நம்மை சிரிக்க வைத்த மனிதர் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என இரங்கல் தெரிவித்தார்.

K Bhagyaraj Suhasini Bhagyaraj

ரசிகர்கள் கருத்து

ஆனால் இந்த பேட்டியின் போது சுஹாசினி சில இடங்களில் சிரித்தபடியே பேசியது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

வீடியோவை பார்த்த சிலர், "இது சிரிக்க வேண்டிய நேரமா?", "ஒரு பெரிய கலைஞரை இழந்த சோகத்தில் குடும்பம் இருக்கும் போது ஏன் இப்படி சிரித்துக்கொண்டு பேசுகிறார்?", "உணர்வுகளை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம்" என்று விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், மற்றொரு தரப்பினர் சுஹாசினிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "அவர் சிரித்தது சந்தோஷத்தால் அல்ல. சிலருக்கு அதிர்ச்சி அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் இயல்பாகவே சிரிப்பு வந்துவிடும். அதனால் மட்டும் அவர் துயரப்படவில்லை என்று சொல்ல முடியாது.", "அவர் பேசிய முழு வீடியோவை பாருங்கள். பாக்யராஜை பற்றிய நினைவுகளை பகிரும்போது மிகவும் வருத்தத்துடன்தான் பேசுகிறார்." என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

K Bhagyaraj Suhasini Bhagyaraj

இதனால் ஒரே வீடியோவை வைத்து இரண்டு விதமான கருத்துகள் இணையத்தில் பரவி வருகின்றன. ஒருபுறம் சுஹாசினியின் முகபாவனையை விமர்சிப்பவர்களும், மறுபுறம் ஒரு சில நொடிகளின் வீடியோவை வைத்து ஒருவரின் உணர்வுகளை மதிப்பிடக் கூடாது என்று கூறுபவர்களும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

பாக்யராஜின் மறைவு ஏற்படுத்திய சோகம் இன்னும் குறையாத நிலையில், சுஹாசினியின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் புதிய விவாதமாக மாறியுள்ளது. அதேநேரம், பாரதிராஜா மறைவின்போது அளித்த பேட்டியிலும் சுஹாசினி முகத்தில் அவ்வப்போது சிரிப்பு வந்தது. இது அவராலேயே கட்டுப்படுத்த முடியாத இயல்பாக இருக்கலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+