ஊரக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.. மனைவி & மகன் தேர்தலில் போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் தேர்தல் 3 ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பின்னர் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது. இந்த மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியது.

Bangaru Adigalars wife and son are contesting in local body election for Melmaruvathur panchayat president post

இந்நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் செப். 22ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் 2 நாட்களில் மட்டும் 13,542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பங்காரு அடிகளார் மனைவி வி இலட்சுமி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவருக்கு அசையும் சொத்துகளாக ரூ 7.51 கோடியும் அசையா சொத்துக்களாக ரூ 16.02 கோடியும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் மொத்த சொத்து மதிப்பாகப் பிழையாக இரண்டையும் கூட்டி 250 கோடி ரூபாய் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல பங்காரு அடிகளாரின் மகன் செந்தில் குமாரும் இந்தத் தேர்தலில் , மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+