வங்கி பணிகள் முடங்கும் அபாயம்.. நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்ட்ரைக்! பரிவர்த்தனை பாதிக்குமா?
சென்னை: வாரத்தில் இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள்) விடுமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தற்போது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளை போல சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தான் கடந்த 23 ஆம் தேதி அன்று மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால், வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேலைநிறுத்த ஐந்து நாள் வங்கிப் பணிக்கான கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இன்று வங்கி சேவை பாதிக்கப்படும். பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சார்ந்த சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனினும் தனியார் வங்கி சேவைகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்படுகிறது. HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.
முன்னதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) பொதுச் செயலாளர் ரூபம் ராய் கூறுகையில், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிக்கும் முடிவு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய வங்கிகள் சங்கம் - UFBU இடையே நடந்த ஊதிய திருத்த ஒப்பந்தத்தின்போது ஏற்கப்பட்டது என்றார். வாரம் 5 நாட்கள் வேலை நாள் என்ற நடைமுறையால், தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் உழைப்பும், நேரமும் குறையாது. எங்களது நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காதது துரதிர்ஷ்டவசமானது" என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications