Bank holidays: ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? தமிழகத்தில் மட்டும் 8 நாட்கள்!
சென்னை: வங்கிகளுக்கு நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தமாக வார விடுமுறை நாட்களையும் சேர்த்து 14 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகின்றன. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரங்களை பார்க்கலாம். இன்று சனிக்கிழமை சேர்த்து 8 நாட்கள் தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டாவது மற்றும் கடைசி வார சனிக்கிழமைகள், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் மாதத்திற்கு 6 நாட்கள் வழக்கமான விடுமுறை நாட்கள் ஆகும்.

14 நாட்கள் விடுமுறை:
அதுபோக அரசு பொதுவிடுமுறை நாட்கள், மாநிலங்களுக்கு தகுந்தபடி மாறும் பிராந்திய விடுமுறை நாட்கள் ஆகியவையும் சேர்த்து விடுமுறை நாட்கள் மாறுபடும். அந்த வகையில், நடப்பு மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 14 நாட்கள் விடுமுறை வரை கிடைக்கின்றன. இந்த நாட்களில் வங்கிகளுக்கு சென்று மேற்கொள்ள வேண்டிய பரிவர்த்தனைகள் அப்டேட்கள் பணிகள் போன்றவை பாதிக்கப்படக்கூடும் என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் விடுமுறை என்ற லிஸ்டை பார்க்கலாம்.
எந்தெந்த நாட்கள் விடுமுறை?
* ஆகஸ்ட் 4: செவ்வாய்க்கிழமை - கெர் பூஜா - அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை
* ஆகஸ்ட் 8, 2026: (சனிக்கிழமை) - 'டெண்டோங் லோ ரம் ஃபாட்" பண்டிகைக்காக சிக்கிம் மாநிலத்தில் விடுமுறை
* ஆகஸ்ட் 13: வியாழக்கிழமை - தேசபக்தி நாள் - மணிப்பூரின் இம்பாலில் விடுமுறை
* ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்
* ஆகஸ்ட் 19 (புதன்கிழமை): மகராஜா பிர் பிக்ராம் கிஷோர் மணிக்ய பஹதூர் பிறந்த நாள் - திரிபுராவில் விடுமுறை
* ஆகஸ்ட் 26 (புதன்கிழமை): மிலாடி நபி, ஓணம் பண்டிகை
சேவைகள் பெற முடியாது
* ஆகஸ்ட் 28 (வெள்ளிக்கிழமை) ரக்ஷா பந்தன், ஸ்ரீ நாரயண குரு ஜெயந்தி , ஈத்-இ-மிலாத்-உல்-நபி, பாங்-லாப்சோல் போன்ற பண்டிகைகள்; இந்த நாளில், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர், கேரளா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
விடுமுறை நாட்களில் ஆன்லைன், யுபிஐ சேவைகள் வழக்கம் போல் கிடைக்கும். அக்கவுண்ட்களில் டெபாசிட் மெஷின்கள் மூல பணம் செலுத்தலாம். நேரடியாக வங்கிகளுக்கு செல்ல வேண்டிய பணிகள் மட்டும் இருந்தால் அவற்றை செய்ய முடியாது. செக் கிளியரிங், சான்றிதழ் சரிபார்ப்பு, அக்கவுண்ட் ஓபனிங், லாக்கர் பயன்பாடுக்ள் உள்ளிட்ட சேவைகளை பெற முடியாது என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications
