வங்கிக்கடன் மோசடி: சென்னையை சேர்ந்த நிறுவனத்தின் ரூ.268 கோடி சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை
சென்னை: ரூ.479 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த அக்னிட் எஜுகேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.268.66 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த அக்னிட் எஜுகேஷன் நிறுவனம்(முன்னர் டெலிடேட்டா இன்ஃபர்மேடிக்ஸ் லிமிடெட்) பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து பல்வேறு கடன் வசதிகளைப் பெற்று மோசடி செய்ததாக பெங்களூர் சி.பிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெங்களூரு சிபிஐ பதிவு செய்த இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் அக்னிட் எஜுகேஷன் லிமிடெட் இயக்குநர்கள் கே பாலசுப்ரமணியம் மற்றும் கே பத்மநாபன் ஆகியோருக்கு எதிராகவும் டெலிடேட்டா மரைன் சொல்யூஷன்ஸ் லிமிடெட் மீது சென்னை சிபிஐ பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையிலும் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.

அப்போது அக்னிட் எஜுகேஷன் லிமிடெட் நிறுவனம் , அதன் துணை நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து பல்வேறு கடன் வசதிகளைப் பெற்று அந்த வங்கியில் ரூ.479 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில்தான் அக்னிட் எஜுகேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.268.66 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
அக்னிட் எஜுகேஷன் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனம் ஐந்து எல்பிஜி கேரியர் கப்பல்கள், எண்ணெய் டேங்கர் போன்ற அசையும் சொத்துக்கள் ஆகியவற்றையும், வெளிநாட்டு வங்கி நிலுவைகள் தவிர, போலி முதலீடுகள், வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான இருப்புநிலைக் குறிப்பை உயர்த்துவதற்காக தொடர்புடைய பரிவர்த்தனைகள் என வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கடன் கணக்கை மாற்றி வாங்கியதாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications