சென்னை டூ தூத்துக்குடி விமானத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சர்பிரைஸ் கொடுத்த "தமிழச்சி"! நடந்தது என்ன?
சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்தில் பயணித்த பெண் வங்கி மேலாளர் ஒருவர் அவர் மாணவியாக இருந்த போது திமுக மேடை நிகழ்ச்சியில் நடித்து காட்டியதை மீண்டும் அவர் முன் நடித்து காட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும் தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.

ராகுல் காந்தி
இதில் பங்கேற்க ராகுல் காந்தி டெல்லியிலிருந்து நேற்று இரவு சென்னை வந்தார். இந்த நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழாவுக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின், எம்பி டி.ஆர். பாலு உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்றனர்.

விமானம்
அப்போது அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், முதல்வர் ஸ்டாலினிடம் போய் தான் ஒரு வங்கியின் மேலாளர் என அறிமுகம் செய்துக் கொண்டார். பின்னர் அவர் 1990 ஆம் ஆண்டு பள்ளி மாணவியாக இருந்த போது ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஸ்டாலின் வந்திருந்த போது அங்கு அமைக்கப்பட்ட திமுக மேடையில் அவர உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின்
அதை இன்று மீண்டும் உங்கள் முன் நடித்து காட்டி பேசலாமா என அந்த பெண் கேட்டார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், பேசுங்கள் என்றார். உடனே மடை திறந்த வெள்ளம் போல் சிறு வயதில பேசியதை அப்படியே முதல்வர் முன்பு கொட்டினார். இறுதியாக முதல்வர் ஸ்டாலின் அந்த பெண்ணுக்கு கை கொடுத்து பாராட்டினார்.

டிஆர்பி ராஜா ட்வீட்
அங்கிருந்தோரும் அந்த பெண்ணுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இது குறித்து எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா, தனது ட்விட்டர் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில் 1990ல் ஒரு மாணவியாக ஆயிரம் விளக்கில் மேடையேறி முழங்கினேன் இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன் என்று முதலமைச்சர் முன்னால் நின்று கம்பீரமாக பேசிய இந்த ஆற்றல்மிகு #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு! ஒரு பெரிய வங்கியில் அவர் இன்று மேலாளர்! என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications