Bank Strike: வங்கி வேலை நிறுத்தம்! அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அக்கவுன்ட்டுக்கு இன்றே வரும் ஊதியம்!
சென்னை: வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்றே ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் அன்று ஊதியம் பெற்று வருகிறார்கள்.
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் மாதத்தின் கடைசி நாளான செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை வரவு வைக்க முடியாத சூழல் எழுந்துள்ளது. அது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் மாத கடைசி நாளில் தேதி ஊதியம் வரவு வைப்பதும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த மாதம் முன்கூட்டியே ஊதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதித் துறையின் தலைமைக் கணக்கு அதிகாரி அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், செப் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கக் கூடும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முன்கூட்டியே செப்டம்பர் 25 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26 ஆம் தேதி சனிக்கிழமை, செப்டம்பர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் அரசு, தனியார் துறை வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அரசு பொதுத் துறை வங்கிகள் செயல்படும் என மத்திய நிதித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், வங்கி நிர்வாகங்கள் சார்பில் வாடிக்கையாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதில், "வங்கி ஊழியர் வேலைநிறுத்த நாட்களில் பணப் பரிவர்த்தனைகளுக்கு மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்" என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அது போல் மத்திய அரசு போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை முன்கூட்டியே இன்றே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களக்கு மாதத்தின் கடைசி நாளில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு வேளை கடைசி நாள் விடுமுறை என்றால் அதற்கு முந்தைய நாளே ஊதியம் வழங்கப்பட்டுவிடும். தற்போது வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் அறிவிப்பால் மத்திய அரசை போல் இன்றே தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்.
இதுதொடர்பாக, அனைத்து துறைகளின் செயலர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் அக்டோபர் 2 முதல் 4-ம் தேதி வரையிலான வார விடுமுறை நாட்கள் காரணமாக வங்கிகளின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை தலைவர்களும் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியப் பட்டியலைத் தயாரித்து ஊதியத்தைச் செப்டம்பர் 25-ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட ஊதியம் வழங்கும் அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும். அதற்கேற்ப கருவூல கணக்கு இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து ஊதியக் கணக்கு அலுவலர்களுக்கு, கருவூல கணக்கு இயக்குநர் டி.சாரு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''வங்கி வேலை நிறுத்தத்தால் இம்மாதத்துக்கான அனைத்து மாதாந்திர ஊதியம், தினக்கூலி, ஓய்வூதியப் பட்டியல்களை வரும் 30-ம் தேதி என்றில்லாமல் முன்கூட்டியே 25-ம் தேதி அன்றே தயாரித்து அனைத்து ஊதியம், தினக்கூலி, ஓய்வூதிய பட்டியல்களுக்கான மின்னணு தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும், இதுதொடர்பாக அனைத்து பணம் வழங்கும் அலுவலர்களுக்கும் பட்டியல்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Click it and Unblock the Notifications