வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு? சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி தடுக்கும் கதை இதுதானோ.. பாருங்க
சென்னை: தமிழக அரசு பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறுவதற்காக சுய சான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் அரசிடம் அனுமதி பெற்றவர்களுக்கு வீடு கட்ட வங்கிகள் கடன் தர மறுத்துவிட்டதாக புகார்கள் எழுந்தள்ளது. இந்த அனுமதி சான்றிதழில் வரைப்படங்கள் இடம் பெறாது என்பதால் கடன் தர வங்கிகள் மறுக்கின்றனவாம்.
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காமல், பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறுவதற்காக சுய சான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2,500 சதுரடி மனையில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டிட அனுமதியினை ஆன்லைனிலேயே அரசு வழங்கி வருகிறது.

இந்த திட்டப்படி பொதுமக்களே நேரிடையாக https://onlineppa.tn.gov.in/SWP-web/ login என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய முடியும். யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், கூடுதல் கட்டணம் யாருக்கும் செலுத்தாமல் பொதுமக்களே விண்ணப்பித்து, கட்டிட அனுமதி பெற முடியும். எனினும் தற்போது வரை பொதுமக்கள் கட்டிட என்ஜினியர்கள் மூலமே விண்ணப்பிக்கிறார்கள். எனினும் இ சேவை மையம் மூலம் அனுமதி பெறும் வசதியை அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் கட்டிட அனுமதிக்காக விண்ணப்பம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் 3, ஆயிரத்து 500 சதுரடிக்குள் கட்டுபவர்கள் என்பதால் இணையதளத்தில் பொதுமக்கள் எளிதாக விண்ணப்பம் செய்து அனுமதி பெற முடியும். ஆனால் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் என்ஜினியர்கள் அல்லது வேறு சிலர் மூலம் தான் விண்ணப்பம் செய்கிறார்களாம். அவர்கள் அரசு கட்டணத்தை விட கூடுதலாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கேட்பதாக புகார்கள் அரசுக்கு பறந்துள்ளன.
எனவே இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டினை தடுக்க தமிழக அரசு, இ-சேவை மையங்கள் மூலம் கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் பொதுமக்கள் இ சேவை மையம் சென்று எளிதாக விண்ணப்பம் செய்து கட்டிட அனுமதி சான்றிதழ் பெற முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டிட அனுமதியினை ஆன்லைனிலேயே அரசு வழங்கினாலும், விதிமீறல் இருப்பது தெரியவந்தால், அனுமதி ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் வங்கிகள் வரைபட அனுமதி வரைபடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனவாம். அப்படி வரைபடங்கள் இல்லை என்றால் கடன் தர முடியாது என்கின்றனவாம் வங்கிகள்.
சாமி வரம் கொடுத்தாலும்,பூசாரி தடுக்கும் கதையாக தமிழக அரசு சுயசான்றிதழ் முறையில் கட்டிட வரைபட அனுமதி அளித்தாலும். வங்கிகள் கடன் தரமறுக்கின்றனவாம். கடன் வாங்கித்தான் பலர் வீடு கட்டுகிறார்கள். இந்நிலையில் கட்டிட வரைப்பட அனுமதி பெற்று அதனை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்று பொதுமக்கள் வீடு கட்டினார்கள். ஆனால் இப்போது பொதுமக்களின் வசதிக்காக சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கப்படும் நிலையில், இதில் வரைப்படங்கள் இடம் பெறுவதில்லை. எனவே வங்கிகள், சுயசான்றிதழ் கட்டிட அனுமதிக்கு கடன் தர முடியாது என்று மறுப்பதாக புகார்கள் உள்ளது.
அரசு கட்டிட வரைப்படத்தில் அரசு அனுமதி முத்திரை வேண்டும் என்றும் வங்கிகள் கூறுகின்றன. நாளை ஏதாவது சிக்கல் வரும் என்று தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் அச்சப்படுகின்றன. ஏனெனில் விதிமீறல் இருப்பது தெரியவந்தால், அரசு சுயசான்றிதழ் அனுமதியை ரத்து செய்துவிடும் என்ற அச்சமும் உள்ளதாம்.
இதனிடையே கட்டிடம் கட்டுவதற்கு அரசு சுயசான்றிதழ் முறையில் அனுமதி தந்தாலும், அதனை ஏற்று கொள்ள வேண்டும் என்று வங்கிகளின் தலைமையிடம் இருந்து உத்தரவுகள் வரவில்லை என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். எனவே இந்த விவாகரத்தில் வங்கிகளுக்கு இதுகுறித்து முறையான அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் அதேநேரம் சுய சான்றிதழ் அனுமதி கடிதத்தில் வரைப்படத்தையும் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications