மோடி நிகழ்ச்சி பேனரில் இருந்து டிடிவி படம் அகற்றம்.. அப்போ என்டிஏ கூட்டணி இல்லையா? தினகரன் விளக்கம்
சென்னை: சென்னை: பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி சென்னை வரும் நிலையில் அந்த கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அங்கு வைக்கப்பட்ட பேனரில் அமமுகவின் டிடிவி தினகரன் படமும் இருந்தது. இதனால் அவர் என்.டி.ஏ கூட்டணியில் இணைவாரா என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவரது படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

என்டிஏ கூட்டணி பேனரில் தினகரன் படம்
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதாவது மோடி பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இதன்படி, பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் படம் இருந்தது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சேருமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று டி.டி.வி. தினகரன் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென அகற்றப்பட்டது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியனரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் விளக்கம்
டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? அல்லது தவெக பக்கம் போவாரா என்ற குழப்பம் நீடித்து வரக்கூடிய நிலையில், அவரது படம் இடம் பெற்று இருந்த பேனர் அகற்றப்பட்டது பல்வேறு யூகங்களுக்கும் வித்திட்டது. இதனிடையே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிடிவி தினகரன், 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என நான் நம்புகிறேன்.

நாங்கள் இடம் பெறும் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். 2021 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று சில நல்ல உள்ளங்கள் விரும்பினார்கள். அதற்காக அனுபவம் மிக்கவர்கள் பேசினார்கள். முடியாமல் போனது.
எந்த தவறும் கிடையாது
அதனால், அதிமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பது தெரியும். எங்கள் மீது எந்த தவறும் கிடையாது. நான் கூட தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கருத்தைதான் வெளியிட்டேன். இன்றைக்கும் சில நல்ல உள்ளங்கள் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் வரவேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள். நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன். அரசியலுக்காக ஜெயலலிதாவிடம் வரவில்லை. எனக்கும் மனசாட்சி இருக்கிறது.
அணிலை போன்று நாங்கள் இருக்கிறோம்
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தாண்டி தமிழ்நாட்டு நலன் எங்களுக்கு முக்கியம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் எங்களுக்கும் பங்கு இருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் சிறிய கட்சியாக இருந்தாலும் நாங்களும் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதையும் முடிவு எடுக்கக்கூடிய ஒரு அணிலை போன்று நாங்கள் இருக்கிறோம். உரிய நேரத்தில் ஒரு கூட்டணிக்கு நாங்கள் செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். நான் ஒரு கூட்டணியில் இருக்கும்போது அந்த கூட்டணிக்கு தலைமை தாங்குபவர்கள் அதனை அறிவிப்பார்கள்.
பேனரில் படம் வைக்கப்பட்டது ஏன்?
ஒருவர் ஆர்வத்தில் பேனரில் படம் வைத்ததற்கு எல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். கமலாலயத்தில் இருந்து பேனர் என்றால் நான் பொறுப்போட பதில் சொல்ல முடியும். வினோஜ் பி செல்வம் என்மீது பிரியமாக இருக்க கூடிய நபர். பாஜகவில் என்னோட பல பேர் என்னுடன் நட்புடன் இருக்கிறார்கள். அவர் ஏதோ ஆர்வத்தில் வைத்துள்ளார். நானே டிவியில் தான் பார்த்தேன். எனவே இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் பொதுக்குழுவில் பேசியது தான் எனது நிலைப்பாடு" என்றார்.
-
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்! -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்












Click it and Unblock the Notifications