என்னது "அவரா"?.. தமிழ்நாட்டிற்காக முக்கிய புள்ளியை களமிறக்கும் மோடி.. ஆளுநர் டிரிப்பின் பின்னணி என்ன
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் நாளை டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் புரோஹித் நீட் தேர்வு தடை, மேகதாது அணை பிரச்சனை, 7 பேர் விடுதலை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில்தான் ஆளுநரின் இந்த பயணத்திற்கு பின் வேறு ஒரு முக்கிய காரணமும் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆளுநர் பயணம்
தற்போது தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் புதுச்சேரிக்கு புதிய துணை நிலை ஆளுநர் அல்லது தெலுங்கானாவிற்கு புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. சமீபத்தில் 8 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர்.

ஆனால் இல்லை
அப்போதே தெலுங்கானா அல்லது புதுச்சேரியின் ஆளுநர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இது தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது. பன்வாரி லால் புரோஹித் புதுவை அல்லது தெலுங்கானாவில் ஆளுநராக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தமிழிசை
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏதாவது ஒன்றை தமிழிசை கவனிப்பார், இன்னொரு மாநிலத்தை பன்வாரி லால் புரோஹித் கவனிப்பார், தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வருகின்றன. மத்திய அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத், ரத்தன் லால் கட்டாரியா, பிரேந்தர் சிங் ஆகிய மூவரில் ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

வலிமை
தமிழ்நாட்டிற்கு வலிமையான ஆளுநர் தேவை என்று மத்திய அரசு கருதுகிறதாம். இதனால், விரைவில் ஆளுநர் மாற்றம் நடக்கும் என்று கூறுகிறார்கள். ரவி சங்கர் பிரசாத், ரத்தன் லால் கட்டாரியா இருவரும் இதற்கான ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

ரேஸ்
முக்கியமாக சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத்திற்கு அதிக வாய்ப்புள்ளது. இவரை மோடி தமிழ்நாட்டில் களமிறக்க தனிப்பட்ட வகையில் விரும்புவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆளுநர் பயணத்திற்கு பின் பல்வேறு மாற்றங்கள் நடக்கலாம். புதிய ஆளுநர் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications