‘பார் நாகராஜ்’ பின்னணியில் யார்.. அவசர நீக்கம் ஏன்.. ஒன்னுமே புரியலையே.. குழம்பும் பொதுமக்கள்!
பார் நாகராஜ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: இப்படி நாகராஜை அவசர அவசரமாக பதவி, பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டால் எப்படி? இப்போ உண்மை தெரியாம போச்சே? என்று மக்கள் வெளிப்படையாக கேட்க ஆரம்பித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர்தான் இந்த பார் நாகராஜ். 34-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர்.
டாஸ்மாக் பாரை லீசுக்கு எடுத்து நடத்தியதால்தான் இவருக்கு பார் நாகராஜ் என்ற பெயர் வந்ததாம். இதை தவிர வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.

மறுநாளே ஜாமீன்
கைதான கொடூரர்கள் 4 பேருக்கும் இவர் நண்பர் ஆவார். கடந்த 27-ந்தேதி திருநாவுக்கரசு குழு செய்த அக்கிரமத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் என்னே ஒரு ஆச்சரியம்.. மறுநாளே ஜாமீனில் வந்துவிட்டார்.

அதிரடி நீக்கம்
ஆனால் விவகாரம் பெரிதாக வெடிக்கவும், அனைத்து கோபமும் அதிமுக மீது திரும்பவும் பார் நாகராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டது அதிமுக தலைமை!

பேஸ்புக் பதிவுகள்
இந்த அதிரடியால் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், மற்றொரு பக்கம் ஏன் அவசர அவசரமாக நாகராஜை கட்சி நீக்கியது என்ற சந்தேகம் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது. அதி முக்கிய அதிமுக நிர்வாகிகளுடன் இவருக்கு நெருக்கம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது சம்பந்தமான அவரது பேஸ்புக் பதிவுகளிலும் சில போட்டோக்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் யார் அந்த முக்கிய புள்ளிகள் என்பது உறுதியாக இதுவரை தெரியவில்லை.

அமுங்கி போச்சே
"ஒருவேளை அந்த பிரமுகர்கள் யார் என தெரிந்திருந்தால் இது சம்பந்தமான மேலும் பல தகவல்கள் வெளிப்பட்டிருக்குமே.. ஆனால் இப்படி அவசர கதியில் கட்சியில் இருந்து நீக்கி விட்டதால், எல்லாமே போச்சே... அது ஏன் இவ்ளோ அவசரம்? இப்போ கடைசியில அந்த பிரமுகர்களின் யார், என்ன பின்னணி, காரணங்கள் எதுவுமே வெளிவராமல் அப்படியே அமுங்கி போய்விட்டதே" என்று பொள்ளாச்சியின் பெரும்பாலான மக்கள் குமுறுகிறார்கள்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications