Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பனையூர் ‘மிஷன்’..சிறுபான்மையினர் ஓட்டு.. விஜய்யின் ஸ்மார்ட் பிளான்..அசைக்கப்படுகிறதா அறிவாலய கோட்டை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பனையூரில் இருக்கும் அந்த பங்களா அலுவலகம் இப்போது வழக்கத்தை விட அதிக பரபரப்பில் இருக்கிறது. காரணம், இன்னும் இரண்டு மாதங்களில் வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தல். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தன் அரசியல் பயணத்தின் மிக முக்கியமான 'மூவ்'-ஐ அங்கிருந்துதான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த முறை விஜய்யின் குறி, தி.மு.க-வின் அசைக்க முடியாத பலமாக கருதப்படும் 'சிறுபான்மையினர் ஓட்டு வங்கி'.

tamil nadu assembly elections 2026 congress

சொந்த ரத்தம்... நேரடி பிணைப்பு!

விஜய்யைப் பொறுத்தவரை இது வெறும் அரசியல் கணக்கு மட்டுமல்ல; அவருக்குள் ஒரு 'சென்டிமென்ட்' கனெக்ஷனும் உண்டு. விஜய்யின் பின்னணி ஒரு கிறிஸ்துவக் குடும்பம் என்பது ஊரறிந்த ரகசியம். அவரது கட்சியிலும் ஆரம்பத்திலிருந்தே கிறிஸ்துவ நிர்வாகிகள் அதிகளவில் வலம் வருகிறார்கள். "நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்தே மாற்றத்தைத் தொடங்குவோம்" என்பதுதான் பனையூர் பாலிசி.

கிறிஸ்துவச் சமூகத்தின் 'வாய்ஸ் மேக்கர்ஸ்' என்று அழைக்கப்படும் முக்கிய மதத் தலைவர்கள், பிஷப்புகள் மற்றும் செல்வாக்கு மிக்க பாதிரியார்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக பனையூரில் ஒரு தனி 'லிஸ்ட்' தயாராகிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் அமைப்புகளுடன் 'கை' கோக்கும் தவெக?

விஜய்யின் பார்வை கிறிஸ்துவ அமைப்புகளோடு நின்றுவிடவில்லை. முஸ்லிம் அமைப்புகளையும் தன் பக்கம் இழுக்க அவர் தீவிரமாக இருக்கிறார். இதுவரை தி.மு.க-வை 'பாதுகாப்பான அரண்' என்று நம்பியிருந்த முஸ்லிம் வாக்கு வங்கியில் ஒரு பிளவை ஏற்படுத்தினால் மட்டுமே, 2026-ல் கோட்டையைப் பிடிக்க முடியும் என்பது விஜய்யின் கணக்கு.

இதற்காகச் சில முக்கிய முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களை பனையூருக்கு அழைத்து நேரடியாகப் பேசவும், அல்லது அவர்களின் ஆதரவை ரகசியமாகப் பெறவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. "மதச்சார்பற்ற அரசியல் என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல், செயலில் காட்டப்படும்" என விஜய் தரப்பு அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறதாம்.

சிறுபான்மையினர் ஓட்டு... ஏன் இவ்வளவு முக்கியம்?

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் கிறிஸ்துவர்கள் சுமார் 6% மற்றும் முஸ்லிம்கள் சுமார் 7% என கிட்டத்தட்ட 13-15% வாக்குகள் சிறுபான்மையினரிடம் உள்ளன.

நிர்ணயிக்கும் சக்தி: தென் மாவட்டங்கள் மற்றும் சில நகர்ப்புறத் தொகுதிகளில் இந்த ஓட்டுகள்தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.

தி.மு.க-வுக்கு செக்: கடந்த காலங்களில் இந்த வாக்குகள் 90% தி.மு.க கூட்டணிக்குத்தான் சென்றன. இதில் வெறும் 4-5% வாக்குகளை விஜய் பிரித்தாலே, அது தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பை பெரிய அளவில் பாதிக்கும்.

அறிவாலயத்தின் அலர்ட்!

விஜய்யின் இந்த 'பனையூர் பிளான்' அறிவாலயத்தை எட்டாமல் இல்லை. "தம்பி என்ன செய்தாலும் சிறுபான்மையினர் எங்களை விட்டுப் போகமாட்டார்கள்" என்று மேலோட்டமாகத் தி.மு.க தலைவர்கள் சொன்னாலும், உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான், சமீபகாலமாகத் தி.மு.க தரப்பில் சிறுபான்மையினர் நலன் சார்ந்த அறிவிப்புகள் வரிசைகட்டி வருகின்றன. ஏனென்றால் இந்த வாக்கு விஜய்க்கு போனால் அது பெரும்பாலும் பாஜகவின் என்டிஏ ஆட்சி வர வழிவகுக்கும்.

இரண்டு மாத காலமே இருக்கும் நிலையில், 'தளபதி'யின் இந்தத் தேர்தல் வேட்டை எந்தளவுக்குத் தி.மு.க-வின் கோட்டையைத் தகர்க்கும் என்பதுதான் இப்போதைய மில்லியன்பாலர் கேள்வி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+