ஷர்மிளாவுக்கு 3 கணவர்கள்.. "அந்தரங்கம்" அலசும் பயில்வான் ரங்கநாதன்.. பெருகும் மலிவு ரசனை.. விவாதம்
நடிகை ஷர்மிளா குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: பயில்வான் ரங்கநாதன், நடிகையும் டாக்டருமான ஷர்மிளா குறித்து பதிவிட்ட வீடியோ, ஆதரவு எதிர்ப்புமான கருத்துக்களுடன் சோஷியல் மீடியாவை வட்டமடித்து கொண்டிருக்கிறது.
டாக்டர் ஷர்மிளா.. வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்து வருபவர்.. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மருத்துவ துறையை சேர்ந்த ஷர்மிளா, மிக தீவிரமான பாஜக எதிர்ப்பாளர் ஆவார். "பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது. ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும். மனிதமும், சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல" என்று ஒருமுறை ட்விட்டரில் ஒருவருக்கு பதிலளித்திருந்தார்.

மாத்ருபூதம்
மறைந்த டாக்டர் மாத்ரூபூதத்துடன் இணைந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான புதிரா? புனிதமா? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் மக்களிடம் பிரபலமானார். செக்ஸ் கல்வி தேவை என்பதற்கான வலியுறுத்தல்கள் தமிழகத்தில் மிகவும் குறைவாக இருந்த நிலையில், செக்ஸ் பற்றின சரியான புரிதல் இல்லாததால்தான், நிறைய பாலியல் குற்ற சம்பவங்கள் நடப்பதாகவும் ஆய்வுகள் சொல்லி வரும் நிலையில், 20 வருடங்களுக்கு முன்பு, செக்ஸ் தொடர்பான சந்தேகங்கள், பாலியல் நோய்கள் பற்றின விளக்கங்களை அளித்து வந்தார் டாக்டர் மாத்ரூபூதம்.

ரங்கநாதன்
தான் ஒரு டாக்டர் என்பதால், இதுகுறித்து நேயர்களின் கேள்விகளை, இயல்பாகவும், வெளிப்படையாகவும், முகம் சுளிக்காமலும் கேட்டு ரசிகர்களை கவர்ந்தவர் ஷர்மிளா.. இதைதான் தற்போது மிகப்பெரிய குறையாக பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.. ஒரு யூடியூப் சேனலுக்கு ஷர்மிளா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தபோது, அதில் பயில்வான் ரங்கநாதனை விமர்சித்ததாக தெரிகிறது. இதனால், ஷர்மிளாவிற்கு பதிலடி தந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அந்தரங்கம்
அதில், "ஷர்மிளா என்னை விமர்சனம் செய்கிறார் அவர் பற்றிய தகவல்களை தெரியுமா? அவருக்கு 3 திருமணம் நடந்து முடிந்துள்ளன.. அந்தரங்கத்தை பற்றி பேசுகிறேன் என்கிறாரே, ஷர்மிளா எதன் மூலம் அறிமுகமானார் புதிரா புனிதமா என்ற அந்தரங்க நிகழ்ச்சி மூலம்தான் வெளிச்சத்திற்கு வந்தார்.. அப்படி இருக்கையில் என்னை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஷர்மிளா
பயில்வான் ரங்கநாதனின் இந்த பேட்டி ஆதரவு, எதிர்ப்புமான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகிறது.. புரட்சி, தனி மனித ஒழுக்கம் என்று வாய்கிழிய பேசுபவர்கள் பலர் இப்படித்தான் சொந்த வாழ்க்கையில் இருக்கிறார்கள், பிரதமரை முழு நேர விமர்சனம் செய்து வந்த ஷர்மிளா இமேஜ்ஜை, ஒரே வீடியோ மூலம் முடித்துவிட்டார் பயில்வான் என்று பதிவு செய்து வருகின்றனர்.. மேலும் சிலரோ, ஷர்மிளா எத்தனை கல்யாணம் செய்தாலும், அது தேவையில்லாத விஷயம். புதிரா? புனிதமா நிகழ்ச்சியில் 2 டாக்டர்களும் கலந்து கொண்டு, நேயர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தது ஒரு தவறா? என்று கேட்டு வருகிறார்கள்.

படுக்கையறை
பயில்வான் ரங்கநாதனை பொறுத்தவரை, பலரது அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்தி வருகிறார்.. இவர் சொல்லும் கிசு கிசு தகவல்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரை பேட்டி எடுத்து வருகின்றன.. அதற்காக ஒரு கணிசமான தொகையை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன.. "நீ யார் இன்னொருத்தர் படுக்கையறையை எட்டிப்பார்க்க? நீ யார் அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் பேசுவதற்கு?" தயாரிப்பாளர் கே.ராஜன் போன்றோர் எச்சரித்திருந்த நிலையில், நியாயமான பதில் இதுவரை கிடைக்கவில்லை..

அந்தரங்கம்
இதற்கெல்லாம் ஒரே காரணம், மக்களின் ரசனைகள் மலிந்து கிடப்பதுதான்.. பயில்வான் போடும் வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கிறார்கள்.. மற்றொரு பக்கம் பயில்வானையும் திட்டுகிறார்கள்.. ஆக, பயில்வானை இதுவரை ஊக்கப்படுத்துவது, மலிவு ரசனைவாதிகள்தான்.. ஷர்மிளாவை விமர்சித்து பதிவிட்ட வீடியோவிலும் நிறைய பேர் பயில்வானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. "பயில்வான் சார், இன்னும் நடிகைகளை பற்றி இப்படிப்பட்ட விஷயங்கள் நிறைய சொல்லுங்க, அவர்களின் முகத்திரையை கிழியுங்க சார்" என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

சுசித்ரா
"நடிகர், நடிகைகளை பற்றி நான் சொல்வதை கேட்பதற்காகவே 3 லட்சம் பேர் இருக்கிறார்கள்.. அதனால் தொடர்ந்து பேசுங்கள் என்று பொதுமக்கள் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.. தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை தவிர யாரும் யோக்கியர் கிடையாது.. நான் யாரை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே பேசுகிறேன்" என்று பயில்வான் அடிக்கடி விளக்கம் தருகிறார்.. சமீபத்தில் பாடகி சுசித்ரா கொந்தளித்துள்ளதுபோல், நடிகர், நடிகைகள் அன்றே கொந்தளிக்கவில்லை.. பயில்வானை கண்டிக்கவும் இல்லை.. இதற்கு என்ன காரணம்?

தனிமனித ஒழுக்கம்
பயில்வான் குறிப்பிடும் நபர்கள் ஏன் இதுகுறித்து வாய் திறப்பதில்லை? ஏன் பதிலடி தருவதில்லை? ஏன் புகார் தர முன்வருவதில்லை என்பது தெரியவில்லை.. இவருக்கெல்லாம் பதில் அளித்து, தேவையில்லாமல் அவரை வளர்த்துவிடக்கூடாது என்று பிரபலங்கள் நினைக்கிறார்களா? அல்லது "பயமா"? அதுவும் தெரியவில்லை.. ஆனால், எப்படி பார்த்தாலும், "தனிமனித ஒழுக்கம்" என்பது எல்லா கால கட்டத்திலும், எல்லா நபர்களுக்கும் அவசியமானது.. அது தவறும் பட்சத்தில், மக்களின் மதிப்பை, நேரடியாகவும், உடனடியாகவும் இழந்து விடுகிறார்கள்.. அவர்கள் யாராக இருந்தாலும் சரி..!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications