தப்பு பண்ணிட்டீங்க கோலி.. ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால்.. கோபப்பட்ட பிசிசிஐ.. பகிரங்க எச்சரிக்கை
சென்னை: இந்திய அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலிக்கு பிசிசிஐ அமைப்பு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. இது தொடர்பான பரபரப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.
2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை இன்று பிசிசிஐ அறிவித்தது. டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து இந்திய அணி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்க உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது.
கோலி: இந்த நிலையில்தான் இந்திய அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலிக்கு பிசிசிஐ அமைப்பு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. அதன்படி விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் தனது யோ-யோ ஃபிட்னஸ் டெஸ்ட் மதிப்பெண்ணை வெளிப்படுத்தியிருப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர்மட்ட அதிகாரிகளை எரிச்சலடைய செய்துள்ளது.
கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலான சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்திய அணி நிர்வாகம் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் கடுமையான புதிய வழிகாட்டுதலைக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி வார்த்தை வழியாக வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் கோலி தனது யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்களை வெளியிட்டு உள்ளார். 17.2 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாக அவர் தெரிவித்தார். பிசிசிஐ-ஆணையிடப்பட்ட உடற்பயிற்சி யோ யோ டெஸ்ட் மதிப்பெண் 16.5 ஆக இருக்க வேண்டும்.
இந்த நிலையில்தான் கோலி தனது மதிப்பெண்ணை வெளியிட்டது விமர்சனங்களை சந்தித்துள்ளது.நீங்கள் செய்தது தவறு. உங்களுக்கு இதுவே கடைசி வார்னிங் என்று பிசிசிஐ கூறி உள்ளதாம். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று கோலி கடிதம் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாம்.

எந்தவொரு ரகசியமான விஷயத்தையும் சமூக ஊடக தளங்களில் போடுவதை தவிர்க்க வீரர்களுக்கு வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயிற்சியின் போது படங்களை பதிவிடலாம் ஆனால் மதிப்பெண்ணை பதிவிடுவது ஒப்பந்த விதியை மீறுவதற்கு சமம் என்று விமர்சனங்களை செய்துள்ளனர்.
யோ யோ டெஸ்ட்: இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை உட்பட இரண்டு விதமான சோதனைகள் வைக்கப்படுகின்றன. இந்த டெஸ்ட் முறை மூலமாகவே தற்போது வரை இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
யோ யோ டெஸ்ட் என்பது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போது வேகத்தை அதிகரிக்க வேண்டும். கடைசி சுற்று வரை வேகத்தை அதிகரித்து அதிகரித்து நிற்காமல் ஓட வேண்டும். இதில் வெற்றிபெற குறைந்தது 17.1 புள்ளிகள் பெற வேண்டும். தற்போது யோ யோ டெஸ்ட் மதிப்பெண் 16.5 ஆக இருக்க வேண்டும் என்று மாற்றப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications