ரூ.1000 மகளிர் உரிமை தொகை ஓவர்.. இனி கூடுதலாக ரூ.2000 வருது! மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு சொன்னபடியே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது இன்னும் இரண்டு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் விரிவாக்கம் + தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் மக்களின் வங்கி கணக்கிற்கே ரூபாய் 2000 வரப்போகிறது. அவை என்னென்ன திட்டங்கள் என்று இங்கே பார்க்கலாம்.
நேற்று முதல்நாள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கலைஞர் உரிமை தொகை திட்டம் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நேற்று முதல்நாள் புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது . கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர், மகளிர் உரிமைத்தொகை பெற்றனர்; தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு திட்டங்கள்: இது போக அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி மேலும் 2000 மொத்தமாக வரும். அதன்படி புதுமை பெண் திட்ட விரிவாக்கம், புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.
தமிழ் புதல்வன் திட்டம்: புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது. இன்னும் 3 வாரங்களில் தமிழ் புதல்வன் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கு பணம்: மேற்கண்ட திட்டத்தில் புதிய மாணவிகள் அடுத்த மாதம் சேர்க்கப்பட உள்ளனர். அதேபோல் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.
போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை.
நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications