"ஆணுறை".. காது கூசும் கேள்வி.. நம்ம மெரினா பீச்சில்?.. பிரபல "பெண் தொகுப்பாளருக்கு" போலீஸ் வார்னிங்
மெரினா பீச்சில் ஆபாசமான கேள்விகளை கேட்ட யூடியூபரை போலீசார் எச்சரித்துள்ளனர்
சென்னை: மெரினா பீச்சுக்கு வரும் மாணவ - மாணவிகளின் மனதை கெடுக்கும் வகையில், ஆபாசமாக கேள்விகளை கேட்டு, அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வந்ததாக, பெண் தொகுப்பாளரை பிடித்து, வழக்கறிஞர் ஒருவர் போலீசில் ஒப்படைத்துள்ளார்.. என்ன நடந்தது பீச்சில்? யார் அந்த பெண் தொகுப்பாளர்?
தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. வளர்ச்சி என்ற நோக்கில் விஞ்ஞானத்தை அணுகினாலும், அதனால் ஏற்படும் வன்முறைகளையும், தவறுகளையும் தடுக்க முடிவதில்லை.
சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறார்கள்.. அதற்கேற்றவாறு, உலகம் முழுவதும் யூடியூப் சேனல்கள் மூலம் சம்பாதிப்பது என்பது அதிகரித்திருக்கிறது.

மிரட்டல்
அதேபோல, சிலர் தங்களது யூடியூப் வீடியோவுக்காகவும், ஏராளமான சப்ஸ்க்கிரைபர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பல கிலோமீட்டர் தூரத்துக்கு செல்வதுண்டு.. இப்படித்தான் மும்பைக்கு சில நாட்களுக்கு முன்பு, தென்கொரியாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் வந்திருந்தார்.. அவரை மும்பை இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு, கட்டிப்பிடித்து முத்தம் கேட்டு மிரட்டியதையடுத்து, போலீசார் உடனடியாக தலையிட்டு, அந்த இளைஞர்களை கைது செய்துவிட்டார்கள்.. ஆனாலும், இந்தியா மானம் வெளிநாட்டில் பறக்கத்தான் செய்தது.

முகம் சுழித்து
பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், இப்படி எந்த ஒரு விஷயத்தை பற்றியும் கவலைப்படாமல், தங்கள் யூடியூப் சேனல் பிரபலமாக வேண்டும், வியூவர்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, எல்லைமீறல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி செய்தும் வருகின்றனர்.. பொதுவெளியில் கேமரா, மைக்குகளுடன் யூடியூபர் கேட்கும் அந்தரங்க கேள்விகளால், பொதுமக்கள் அதிர்ந்தும், முகம் சுழித்து விலகி செல்வதும் உண்டு.. சிலர் முகத்தை மூடிக்கொண்டு, வெட்கப்பட்ட அந்த விஷயங்களை பகிரங்கப்படுத்துவதும் உண்டு. அந்தவகையில், 2 நாட்களுக்கு முன்பு நம்முடைய மெரினா பீச்சிலேயே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பீச் பீச்
பொதுமக்களை தேடி சென்று பேட்டி எடுக்காமல், பொதுமக்கள் திரண்டு வரும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் பீச்சுக்களுக்கே சில யூடியூபர்கள் கேமராவை எடுத்து கொண்டு வந்துவிடுவார்கள். அப்படித்தான், மெரினா பீச்சின் லூப் சாலையில் வந்தவர்களிடம் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச கேள்விகள் கேட்கப்பட்டன.. வீரா டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் அது.. தனியாக நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் ஆபாச கேள்விகளை கேட்டார் இளம்பெண்ணாண, நிகழ்ச்சி தொகுப்பாளர்.. இதைக்கண்ட அந்த வழியாக வந்த வழக்கறிஞர் ஒருவர் நேரடியாகவே இதை பார்த்து, கொந்தளித்துவிட்டார்..

காண்டம்
அந்த பெண் தொகுப்பாளர் மற்றும் கேமரா மேன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. மேலும் அங்கு வந்த ரோந்து போலீசாரிடமும், அந்த பெண் அத்துமீறியதாக புகார் செய்தார். இதையடுத்து, அவர்களிடம் இருந்து கேமராவை பறிமுதல் செய்த போலீசார், மெரினா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும், "இனிமேல் இப்படியெல்லாம் ஆபாசமான கேள்விகளை கேட்க மாட்டோம்" என்று சொல்லி, மன்னிப்பு கடிதமும் எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். மகா மட்டமான கேள்விகளை மாணவ, மாணவிகளிடம் கூச்சமின்றி கேட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து, தங்களது "வீரா டாக்ஸ்" என்ற யூடியூப்பில் ஒளிபரப்பி வந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.

ஆணுறை
இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, இதே மெரினாவில் ஒரு யூடியூப் சேனல் நடத்துபவர், "எந்த வகை காண்டம் பயன்படுத்தினால் பெண்களுக்கு பிடிக்கும்" என்பது சம்பந்தமான கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் அந்த கேமராமேனை அங்கேயே அடித்து நொறுக்கியுள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் அப்போது, ஸ்டேஷன் வரை போகவில்லை என்பதால், நடந்த சம்பவமே வெளியே தெரியாமல் போய்விட்டது.. இதுபோல எத்தனையோ யூடியூப் சேனல்கள் அத்துமீறி இன்னமும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது.. இந்த சேனல்களுக்கு இளம்பெண்களை காம்பியராக நியமித்து, அருவருப்பான கேள்விகளையும் கேட்க வைத்து அவர்களை வற்புறுத்தி வருகின்றனர்.

மீறிடுச்சே
தினம் தினம் புற்றீசல்கள் போல் முளைத்து கொண்டிருக்கும், இதுபோன்ற யூடியூப் சேனல்களுக்கென்று எந்த வரைமுறையும் இல்லை.. இவர்களுக்கென எந்த சென்சார் போர்டும் இல்லை.. இவர்களை கேள்வி கேட்க யாருமே இல்லை.. இவர்கள் மீது புகார் தரவும் யாரும் முன்வருவதில்லை.. யூடியூப் சேனல் நடத்துபவர்களை பார்த்து கேள்வி கேட்டால், நாளை ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று சில போலீசாரும் ஒதுங்கி செல்வதும் நடக்கிறது.. யூடியூப் சேனல்கள் என்பது பத்திரிகை துறைக்கு அப்பாற்பட்டது என்பதை பலரும் அறிவதில்லை... அதனால், இதுபோன்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதே, நம் அனைவரது, அவசிய கோரிக்கையாக முன்வைக்க வேண்டி உள்ளது..!
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications