சென்னையில் ‘பீப்' பிரியாணி ஹோட்டல்களை விடாதீங்க.. உணவு பாதுகாப்பு துறை போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 'பீப்' பிரியாணி தயாரிக்கும் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்த வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவின் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

in-chennai-tamil-nadu-food-safety-department-orderedinspections-of-all-beef-biryani-hotels

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 'பீப்' இறைச்சிகளில் செயற்கைநிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சைதாப்பேட்டை ஈஸ்ட் ஜோன்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் பக்கோடா உள்ளிட்டவை வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறத்துடன் காணப்பட்டன. அதனை எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனை ஹோட்டல் உரிமையாளரும் ஒப்புக்கொண்டார். மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு முன்பு செயற்கை நிறமூட்டியை சேர்த்ததாக அவர் கூறினார்.அதன்பிறகு மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நிறமூட்டி என்னவென்று அறிந்து கொள்ளவும், அது உணவு பாதுகாப்பு துறையின் தரநிலையை பூர்த்தி செய்கிறதா? என்பது பற்றிய அறியும் வகையில் மாட்டிறைச்சி ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ''இந்த ஆய்வக அறிக்கை வந்த பிறகு அந்த ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய சோதனையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஹோட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது'' என்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் மாட்டிறைச்சி பிரியாணி தயாரிக்கும் அனைத்து ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளிலும் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வின்போது இறைச்சியின் தரம், செயற்கை நிறமூட்டிகளின் பயன்பாடு, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை உணவகங்கள் பின்பற்றுகிறதா? என்பதை அறிய இந்த சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்த அனுமதி இருந்தாலும் அதன் தரம் மற்றும் பயன்படுத்தும் அளவு குறித்து உணவு பாதுகாப்பு துறை வழிக்காட்டுதல்களை வழங்கி உள்ளது. இதனை ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் அது மீறப்பட்டு வருவதாக புகார்கள் உள்ள நிலையில் இந்த சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னையில் இறைச்சிகளில் செயற்கை நிறமூட்டிகளை அளவுக்கு அதிகமாக சேர்ப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அசோக் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சிக்கன் மற்றும் மாட்டிறைச்சி உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அப்போது 3 கிலோ எடையுள்ள, செயற்கை நிறமூட்டப்பட்ட மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில்அந்த உணவகம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முறையான உரிமம் இல்லாமலேயே இயங்கியது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+