அரசு விடுதிகளில் மாட்டுக்கறி விவகாரம்.. விளக்கம் தந்த வன்னியரசுக்கு ஜான் பாண்டியன் ஆதரவு
சென்னை: சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்த அமைச்சர் வன்னியரசுவின் விளக்கத்தை தொடர்ந்து, தனிப்பட்ட விருப்பத்தை அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார். ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதை சில அரசியல் தரப்பினர் விரும்பவில்லை என்ற அடிப்படையில் அவரது ஒவ்வொரு கருத்தையும் அரசியல் சர்ச்சையாக மாற்றுவது ஜனநாயக அரசியலுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் கூறுகையில், "சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து "பரிசீலிப்போம்" என்றுதான் அமைச்சர் வன்னியரசு கூறியதாகவும், தனது தனிப்பட்ட விருப்பம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நான் அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, "என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை நான் எங்கும் கூறவில்லை. விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றுதான் கூறினேன். இறுதி முடிவை அரசு தான் எடுக்கும்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரின் விளக்கத்தைப் பெறுவதற்கு முன்பு, அவரது கருத்து குறித்து நானும் கண்டனத்தை பதிவு செய்திருந்தேன். ஆனால் அவரிடம் நேரடியாகப் பேசியபோது, அவர் கூறிய கருத்தின் பின்னணி வேறுபட்டது என்பது தெளிவாகியது.
ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதை சில அரசியல் தரப்பினர் விரும்பவில்லை என்ற அடிப்படையில் அவரது ஒவ்வொரு கருத்தையும் அரசியல் சர்ச்சையாக மாற்றுவது ஜனநாயக அரசியலுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல.
மாட்டிறைச்சி விவகாரத்தில் அமைச்சர் கூறியதாக வெளியான கருத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதும், சில அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை அறிவிப்பதும், உண்மையான விளக்கத்தைப் பெறாமல் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் ஒரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பத்தை அவருடைய கருத்தாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.
முன்னதாக ஜான் பாண்டியன் வெளியிட்டிருந்த பதிவில் கூறும் போது, "சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதைப் போல, மாட்டிறைச்சியும் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்திருப்பது சர்ச்சை ஏற்படுத்தும் கருத்து தெரிவித்துள்ளார். மிக எச்சரிக்கையோடு முடிவெடுக்கவேண்டும்!
சமூக நீதி விடுதிகள் என்பது அரசின் நலத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் விடுதிகளாகும். அங்கு வழங்கப்படும் உணவு தொடர்பான எந்த முடிவும் மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, உணவு விருப்பம் மற்றும் அவர்களின் குடும்ப, பண்பாட்டு உணர்வுகளை கருத்தில் கொண்டே எடுக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட உணவை வழங்குவது குறித்து அரசு பரிசீலிப்பதற்கு முன்பாக, அந்த விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கருத்து என்ன? அவர்களின் உணவு விருப்பம் என்ன? பெற்றோரின் கருத்து என்ன? என்பதைக் கண்டறிவதே முதன்மையானதாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.

Click it and Unblock the Notifications