பீலாவை மாத்தியாச்சு.. விஜயபாஸ்கரும் மாற்றப்படுவாரா.. அவருக்கும் பங்குஇருக்கே.. கொங்கு ஈஸ்வரன் கேள்வி
பீலா ராஜேஷ் டிரான்ஸ்பர் குறித்து கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "அரசின் தோல்வி தான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது... அவரும் மாற்றப்படுவாரா? அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை" என கொங்கு ஈஸ்வரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளராக இருந்துவந்த பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்... வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை வருவாய் ஆணையர் பதவியை அவர் கூடுதலாகக் கவனிப்பார்" என்று கூறப்பட்டிருந்தது.

மிகப்பெரிய திருப்பத்தையும், சலசலப்பையும் இந்த அறிவிப்பு இன்று ஏற்படுத்தியது.. இந்நிலையில் இது தொடர்பாக கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சில சந்தேகங்களையும் எழுப்பி, ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
"தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. நோய் தடுப்பு திட்டமிடலில் தமிழக அரசின் செயல்பாடுகள் போதாது என்று பலமுறை எல்லா தரப்பினரும் எச்சரித்தனர். ஆனால் இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை தான் சிறப்பாக செயல்படுகிறது என்று பேசியும், சுகாதாரத்துறை அமைச்சரும் செயலாளரும் இரவு பகல் பார்க்காமல் வெகு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்லியும் தட்டிக்கழித்தனர்.
உலகத்திலேயே தமிழக சுகாதாரத்துறை தான் சிறப்பாக செயல்படுகிறது என்று பிரச்சாரமும் செய்தார்கள். கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை செயலாளர் திடீரென்று செயல்படவில்லையா ?. தினசரி அவர் ஊடகத்தை சந்தித்து என்ன சொல்கிறாரோ அதைதான் தமிழக மக்கள் வேதவாக்காக கேட்டார்கள்.
இன்றைக்கு கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான பின்னால் சுகாதாரத்துறை செயலாளர் செயல்பாடுகள் சரி இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்டவர் தான் சுகாதாரத்துறை செயலாளர். அரசின் தோல்வி தான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா ?
அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை தமிழக மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். இப்போதாவது ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு திட்டமிடலோடு செயல்படுங்கள். தவறவிட்டால் நோய் தொற்றினால் தடுமாறிக் கொண்டிருக்கின்ற தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications