பேரு மட்டும் பீரங்கி சுப்ரமணி! பேசச் சொன்னால் ஒரே உதறல்! விழுந்து விழுந்து சிரித்த டிடிவி தினகரன்!
சென்னை: பேரு மட்டும் பீரங்கி சுப்ரமணின்னு வச்சுகிட்டு பேசச்சொன்னால் இப்படி பதறுகிறீர்களே என அமமுக நிர்வாகியை பொதுக்குழுவில் கலாய்த்தார் டிடிவி தினகரன்.
அதுமட்டுமல்ல அதென்னெ பீரங்கி சுப்ரமணின்னு பேர் வச்சுருகீங்க, என பெயர்க் காரணம் கேட்டதோடு நிர்வாகி சொன்ன பதிலை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் டிடிவி தினகரன்.

இதனால் அமமுக பொதுக்குழுவில் சிரிப்பலை ஏற்பட்டதோடு கலகலப்பாக கூட்டம் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரை வாழ்த்தி பேசுவதற்காக துறையூர் நகர அமமுக செயலாளர் பீரங்கி சுப்ரமணியம் மேடையேறி மைக் பிடித்தார்.
மைக்கை பிடித்தவுடன், ''இப்ப வந்து'' என நடிகர் வடிவேலு பாணியில் ஜெர்க் ஆகத் தொடங்கினார். தனக்கு பேசத் தெரியாது என்றும் அமமுக மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் தான் தன்னை பேசுமாறு மேடையேற்றி விட்டார் எனவும் வெள்ளந்தியாக பேச, இடையே மைக்கை எடுத்த தினகரன், பீரங்கின்னு பெயரை கேட்டதும் நான் கூட நீங்க நல்லா பேசுவீங்கன்னு நினைச்சேன் என கலாய்த்தார்.
அதற்கு விளக்கம் அளித்த அமமுக நிர்வாக் பீரங்கி சுப்ரமணியன், தாம் காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 2016 முதல் அமமுகவில் இருப்பதாகவும் காங்கிரஸில் இருந்த போது போபர்ஸ் பீரங்கி ஊழல் என்று தனது நண்பர்கள் தன்னை பட்டப்பெயர் சூட்டி கிண்டலாக அழைத்து வந்ததாகவும் நாளடைவில் அதுவே பீரங்கி சுப்ரமணி என தனது பெயர் மாறிவிட்டதாகவும் கூறினார்.
உங்க பெயருக்கு பின்னால் இப்படியொரு விளக்கமா என்பதை அறிந்த டிடிவி தினகரன் நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அதேபோல் அமமுக பொதுக்குழுவும் கலகலப்பாக நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications