2016-ல் தமிழருவி மணியனுக்கு.. 2026ல் விஜய்க்கு.. விஜயகாந்தை போலவே தவெகவிற்கும் நடந்து இருக்கே
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசில் சின்னம் தொடர்பாக சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் விஜய் அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக விஜய்யின் தவெக கட்சி போட்டியிடுகிறது. தவெகவை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட கட்சியாகும்.

விசில் சின்னம் கொடுத்த தேர்தல் ஆணையம்
தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியையும் தற்போதே தொடங்கி விட்டது. அங்கீகாரம் பெறாத கட்சிகளை பொறுத்தவரை அவை தங்களுக்கு பொது சின்னத்தை கேட்கும். இதற்காக தேர்தல் ஆணையத்தில் தனி கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்படும்.
இதனை தேர்தல் ஆணையம் பரிசீலித்து சலுகை அடிப்படையில் பொது சின்னங்களை ஒதுக்கீடு செய்யும். இதன்படி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 'விசில்' சின்னத்தை பொது சின்னமாக வழங்க கோரிக்கை விடுத்தது. இதனை பரிசீலித்த இந்திய தேர்தல் ஆணையம், சலுகை அடிப்படையில் அந்த சின்னத்தை தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சிக்கு அனுமதித்து கடிதம் அனுப்பி இருக்கிறது.
சுவர்களில் வரைய தொடங்கிய தவெகவினர்
தவெகவுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டதால், அந்தக் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய மறுநிமிடமே, சின்னம் குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கின. கட்சி நிர்வாகிகளும் பல்வேறு இடங்களில் கட்சியின் சின்னமான விசிலை வழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சில இடங்களில் சுவர்களில் 'விசில்' சின்னத்தை வரைய தொடங்கிய காட்சிகளை பார்க்க முடிந்தது. இப்படி தவெகவினர் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விசில் சின்னம் இதற்கு முன்பாக எந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது என்பது தொடர்பான தகவல்களும், விசில் சின்னம் பற்றிய சில தகவல்களும் வெளியாகியுள்ளன.
தமிழருவி மணியன், மயில்சாமி, பிரகாஷ்ராஜ்
அதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருந்தது. அதேபோல, 2021 தேர்தலில் நடிகர் மயில்சாமி சுயேட்சையாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு விசில் சின்னமே கிடைத்தது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் விசில் சின்னத்தில்தான் போட்டியிட்டு இருந்தார். இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
விஜயகாந்தை போலவே விஜய்க்கும்..
அப்போது விஜயகாந்த் தனது கட்சிக்கு முரசு சின்னத்தை கேட்டிருந்தார். விஜயகாந்த் கேட்ட சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தற்போது விஜய்க்கும் அவர் விரும்பிய சின்னமே கிடைத்து இருக்கிறது. தவெக சார்பில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை உள்ளிட்ட 10 சின்னங்கள் விருப்பமாக கோரப்பட்டு இருந்திருக்கிறது.
எனினும், அதில் பிரதான விருப்பத் தேர்வாக விசில் சின்னத்தையே விஜய் கொடுத்ததாக தெரிகிறது. அந்த வகையில் விஜய் கேட்ட சின்னமே கொடுக்கப்பட்டுள்ளதால் அவரும் உற்சாகம் அடைந்துள்ளாராம். தவெக தொண்டர்களும் விசில் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications