சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்எஸ்எஸ்ஸும் இந்துக்களும் ஒன்றல்ல.. வேறு வேறு.. கமல்ஹாசன் மீண்டும் பொளேர்!

இந்துக்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது, இரண்டு ஒன்று அல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் கூறியது சரித்திர உண்மை... சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம்

    சென்னை: இந்துக்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது, இரண்டு ஒன்று அல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறிப்பிட்டார். இந்த கருத்து தேசிய அளவில் பெரிய வைரலாகி உள்ளது. பலர் இது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்.

    Being Hindu and Being RSSian are not same says, Kamal

    இந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சியில் கமல் பிரச்சாரத்தின் போது முட்டை வீசி தாக்கப்பட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

    எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை! எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை!

    இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், தீவிரவாதம் என்பது எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு தாக்குதல் நடக்கும் போது அதை கவனமாக கையாள வேண்டும். ஒரு அமைப்பிற்கு பின் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.

    இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் கிடையாது. இந்துக்கள் யார் ஆர்எஸ்எஸ் யார் என்று மக்களுக்கு தெரியும். சிலர் இவர்கள் எல்லோரும் ஒரே நபர்கள்தான் என்று கூறுவார்கள்.

    ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கிடையாது. கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. பிரிவினையாக பேசும் ஆட்களை மக்கள் புரிந்து கொள்வார்கள், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Being Hindu and Being RSSian are not same says, Kamal Haasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X