பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் லேப்டாப்பில் கொட்டி கிடக்கும் சென்னை பெண்களின் ஆபாச வீடியோக்கள்
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் லேப்டாப்பில் இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள்
சென்னை: பாதிரியாரின் லேப்டாப்பில் இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. இதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் அன்டோ (29). இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

புகைப்படம்
பெண்களுடன் புகைப்படம் ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகி பகீர் கிளப்பின. மேலும் இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்தவாறு செல்போன் வீடியோகாலில் உரையாடி முத்தம் கொடுக்கும் காட்சிகளும் பார்ப்பதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

வைரல்
இந்த நிலையில் இந்த சம்பவம் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பெனடிக்ட் ஆன்றோ பாலியல் ரீதியாக வாட்ஸ் ஆப் சாட்டிங் செய்து தொல்லை கொடுப்பதாகவும் தனது ஆசைக்கு பணியுமாறும் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார்.

5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதையடுத்து பாதிரியாரின் மீத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தலைமறைவாக உள்ள பாதிரியாரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் பாதிரியாரின் லேப்டாப்பை பார்த்த போது சென்னையை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. இதை பார்த்து போலீஸாரே அதிர்ந்தனர்.

சைபர் கிரைம்
மேலும் பாதிரியாரால் எந்த பெண்ணாவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றும் அவ்வாறு புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தன்னை பற்றிய வீடியோக்கள் வைரலானதை அடுத்து வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

நான் செய்யவில்லை- பாதிரியார்
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிரியாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நான் யாரையும் மிரட்டி வீடியோ, புகைப்படங்கள் எடுக்கவில்லை, நான் எதையும் வெளியிடவில்லை, அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் விரும்பாமல் நான் எதையும் செய்ததில்லை. நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். திருமணம் செய்ய முடிவு செய்தேன்.

திருமணம் செய்து வைக்க பெண் வீட்டார் மறுப்பு
ஆனால் நான் பாதிரியார் என்பதால் என்னை திருமணம் செய்து வைக்க பெண் வீட்டார் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பாதிரியார் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். ஆனால் என் வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து நாங்கள் இருவரும் பேசி பிரிந்து விட்டோம். அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

நாகர்கோவில் சிறை
இதையடுத்து ஆன்றோவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே நாகர்கோவிலை சேர்ந்த காசி இது போல் இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் விழவைத்து பின்னர் உடலுறவு கொண்டு அதை வீடியோவாக எடுத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பகீர் கிளப்பிய நிலையில் தற்போது இந்த பாதிரியாரின் செயலும் உள்ளது.












Click it and Unblock the Notifications