பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு தற்போது முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரு விமான நிலையம் மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி ஒரு முக்கிய பாடமாக உள்ளது. விமான நிலையம் என்பது உயர்நிலை மக்களுக்கானது மட்டுமல்ல, அது ஒரு பெரிய பொருளாதார இயந்திரம் என்பதை பெங்களூரு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பெங்களூரு விமான நிலையம் (கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்) இன்று வெறும் பயணிகள் போக்குவரத்து மையமாக மட்டும் இல்லை. இந்தியாவின் அடுத்த முக்கிய முதலீட்டு ஈர்ப்பு மையமாக (Investment Magnet) மாறியுள்ளது.

parandur airport latest news parandur airport delay tamil nadu bengaluru airport economic impact parandur airport project status tamil nadu second airport parandur vs bengaluru airport chennai airport expansion tamil nadu infrastructure loss devanahalli growth story parandur airport investment Airport SIPCOT chennai Vijay Parandur SIPCOT Park vs Parandur Airport Tamil Nadu second airport debate 1700 acre SIPCOT economic impact Parandur airport vs industrial park Tamil Nadu industrial growth 2026 SIPCOT job creation Tamil Nadu Parandur airport farmland issue Tamil Nadu global investment airport SIPCOT vs Aerotropolis Tamil Nadu economic development strategy

குறிப்பாக, வடக்கு பெங்களூரு பகுதியான தேவனஹள்ளி (Devanahalli) பகுதி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. 10 வருடத்திற்கு முன்பு வறண்ட காடுகளாக இருந்த பகுதி தற்போது பெங்களூரில் வேகமாக வளரும் பகுதியாக மாறியுள்ளது. டெக் பார்க், மால், ஆடம்பர வீட்டு பகுதிகள், அப்பார்ட்மென்ட், முக்கிய நிறுவனங்களின் அலுவலகம் என மொத்த பகுதியும் ராட்ஷச வேகத்தில் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது.

உதாரணமாக ஃபாக்ஸ்கான் (Foxconn), விண்வெளித் தொழில் (Aerospace), செமிகண்டக்டர் தொழில் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகள் இப்பகுதியில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டங்களும் இணைந்து, இந்தப் பகுதியை பெங்களூரின் அடுத்த பொருளாதார வளர்ச்சி இயந்திரமாக (Growth Engine) மாற்றி வருகின்றன.

பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தி

பெங்களூரு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் வெறும் பயண வசதி மட்டுமல்ல, அது முதலீடுகளை ஈர்க்கும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கும், புதிய நகரங்களை உருவாக்கும் ஒரு பெரிய சக்தி என்பதை இங்கு காண முடிகிறது.

ஏர்போர்ட் காரிடார் மூலம் லாஜிஸ்டிக்ஸ், தொழில் பூங்காக்கள், ஹோட்டல்கள், வணிக மையங்கள் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. வேலைவாய்ப்புக்காக வரும் மக்கள் இதே பகுதியில் தங்கும் காரணத்தால் தற்போது இப்பகுதியில் பல லட்சம் குடும்பங்கள் வசிக்கும் இடமாற மாறி வருகிறது. பெங்களூரு விமான நிலையம் இன்று தேவனஹள்ளியை நாளைய பெங்களூரின் மிகப் பெரிய வளர்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

பரந்தூருக்கு என்ன பாடம்?

தமிழ்நாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தடைபட்டுள்ள நிலையில், பெங்களூரு மாதிரி நமக்கும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருந்தது. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக உருவாக இருந்த பரந்தூர் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் பகுதிகள் மேற்கு தமிழகத்தின் பொருளாதார மையமாக உருவாகியிருக்கும்.

இப்போது அண்டை மாநிலங்கள் விமான நிலைய வசதிகள் மூலம் முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், தமிழகம் பின்தங்கும் அபாயம் உள்ளது. பரந்தூர் திட்டம் தொடர்பான தாமதம் தமிழகத்தின் நீண்டகால வளர்ச்சியை பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

காலதாமதம் ஒரு இழப்பு

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டாலும் சென்னைக்கு 2வது விமான நிலையம் அவசியம் இப்படியிருக்கையில், புதிதாக சென்னையை சுற்றி 5000 ஏக்கர் நிலம் தேடுவது கடினம். அப்படி தேடி கண்டுப்படித்தாலும் மத்திய அரசிடமும், விமான போக்குவரத்து துறையிடம் அனுமதி பெற குறைந்தது 5 வருடங்கள் ஆகும். விமான நிலையம் கட்டி முடித்த கூடுதலாக 5 வருடங்கள் ஆகும்.

இந்த 10 வருட இடைவெளியில் தமிழ்நாட்டுக்கு வரும் முதலீட்டு வாய்ப்புகள், வளர்ச்சி வாய்ப்புகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆந்திரா, கர்நாடகா

இதேவேளையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு போட்டியாக ஓசூர்-க்கு அருகில் புதிய விமான நிலையம் உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இதேபோல் ஆந்திர அரசு ஸ்ரீசிட்டி அருகில் ஒரு விமான நிலையத்தை கட்ட திட்டமிட்டால் சென்னையில் 2வது விமான நிலையம் வருவது வெறும் கனவாகவே மாறிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

விமான நிலையம் என்பது உயர்நிலை மக்களுக்கானது என்ற எண்ணம் தவறானது. அது முழு பொருளாதாரத்தையும் உயர்த்தும் ஒரு கருவி. பெங்களூரு இதை நிரூபித்துள்ளது. தமிழக அரசு பரந்தூர் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்து, மாற்று வழிகளுடன் முன்னெடுத்தால் மட்டுமே மேற்கு சென்னை இந்தியாவின் அடுத்த பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+