சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரு இசையமைப்பாளர் அருண் சிவாக் நிவாரண பணிகள்- அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பொம்பியே பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பெங்களூரு இசையமைப்பாளர் அருண் சிவாக் மற்றும் Exchangealumni ஆகியவற்றை அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ பாராட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவர்களது துயரைத் துடைக்கும் பணியில் பல்வேறு தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

Bengaluru based musician Arun Sivag lauded by Mike Pompeo for his humanitarian efforts

பெங்களூருவைச் சேர்ந்த அருண்சிவாக், இசையமைப்பாளர். குளோபல் கல்சர் என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர். அருணின் அமைப்பும் Exchangealumni- ம் இணைந்து பெங்களூருவில் ஏப்ரல் மாதம் மட்டும் 12,000 கிலோ உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை விநியோகித்துள்ளது.

இன்னொரு லாக்டவுன்... பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ராகுலுடனான உரையாடலில் ரகுராம் ராஜன் வார்னிங்இன்னொரு லாக்டவுன்... பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ராகுலுடனான உரையாடலில் ரகுராம் ராஜன் வார்னிங்

SCEADFoundation,RagarashmiFoundation ஆகியவற்றின் உதவியுடன் அருண் சிவாக் இந்த நிவராணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான @exchangealumni மற்றும் குளோபல்கல்சர் நிறுவனர் @SivagArun ஆகியோரது உதவிக்கு மிக்க நன்றி. பெங்களூருவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SCEADFoundation,RagarashmiFoundation ஆகியவை மூலம் 12,000 கிலோ உணவுப் பொருட்கள், மருந்துகள் , அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.

Bengaluru based musician Arun Sivag lauded by Mike Pompeo for his humanitarian efforts

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    இதேபோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ, இந்தியாவில் Exchangealumni-ன் பணிகள் சிறப்பாக உள்ளன. @sivagarun உங்களது மனிதாபிமான எண்ணங்கள் எங்களுக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் பாராட்டியுள்ளார்.

    English summary
    US Secretary of State Mike Pompeo has praised Bengaluru based musician Arun Sivag for humanitarian efforts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X