கணவனை கொல்ல துல்லியமாக பிளான் போட்ட ஹரிணி சிக்கியது எப்படி? பெங்களூர் போலீசுக்கு கிடைத்த 2 க்ளூ
பெங்களூரு: பெங்களூரு ஹரிணியின் கள்ளக்காதல் 2 உயிர்களை காவு வாங்கிவிட்டது.. திட்டப்படி கணவனை மட்டும் கொலை செய்ய முடிவாகியிருந்ததாம்.. எதிர்பாராதவிதமாக, குறுக்கே மகன் வந்துவிட்டதால், அந்த பிஞ்சு குழந்தையும் சேர்த்தே கொன்றுவிட்டாராம்.. ஹரிணியின் வாக்குமூலத்தை கேட்டு போலீரே நிலைகுலைந்து போய்விட்டனர்.. இந்த இரட்டை கொலை எப்படி நடந்தது? போலீசுக்கு கிடைத்த 2 க்ளூ பற்றின தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கர்நாடகா குணிகல் பகுதியை சேர்ந்த அபிநந்தன் (38), ஹரிணியை 2021-ல் திருமணம் செய்துள்ளார்.. இவர்களுக்கு 4 வயதில் யதுவீர் கவுடா என்ற மகன் உள்ளார்.. பெங்களூரு சிக்கபானவரா பகுதியில் வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வராண்டா ரத்தக்கறை
இந்நிலையில், கணவரும் குழந்தையும் அசைவின்றி கிடப்பதாக ஹரிணி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரும் உயிரிழந்திருப்பதை உறுதி செய்து உடல்களை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையையும் மேற்கொண்டனர்..
அப்போதுதான், வீட்டின் வராண்டாவில் ரத்தக்கறை இருந்ததும், சிசிடிவி செயல்படாமல் இருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்காதல் கொடூரம்
அதுமட்டுமல்லாமல், ஹரிணிக்கு ஆண் நண்பர் இருந்ததாகவும், அவருடன் சில மாதங்கள் தனியாக வசித்ததாகவும் அபிநந்தனின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.. இதையடுத்து ஹரிணியிடம் தீவிர விசாரணை நடத்தியபோதுதான் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்..
அபிநந்தன் தூங்கும்போது தலையணையால் முகத்தை அழுத்தி கொன்று விட்டாராம் ஹரிணி.. இதை கண்ணால் பார்த்துவிட்ட மகனையும் அதே முறையில் கொன்றுவிட்டு, எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டாராம்.. இவ்வளவையும் போலீசாரிடம் ஹரிணி வாக்குமூலமாக தெரிவித்த நிலையில், தலைமறைவாகியிருந்த கள்ளக்காதலைனையும் இன்று கைது செய்துள்ளனர்.
இரட்டை கொலைகள் எப்படி நடந்தன
இந்நிலையில், இந்த இரட்டை கொலைகள் குறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.. அபிநந்தனுக்கும் ஹரிணிக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடு காரணமாக தகராறுகள் வந்து போனதாம்.. அதனால் கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம் ஹரிணி,.. பிறகு ஹரிணியை அவரது பெற்றோர் சமரசம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்..
இதற்கு பிறகு 4 மாதங்களுக்கு முன்பு, புதிய வாழ்க்கை வாழப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மறுபடியும் ஓடிப்போய்விட்டாராம் ஹரிணி.. மீண்டும் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து குடும்பம் நடத்த அழைத்து வந்திருக்கிறார்கள்.
சொத்துக்காக பிளான்
இப்படிப்பட்ட சூழலில்தான், சோசியல் மீடியா மூலம் ஹாரோஹள்ளியை சேர்ந்த பேக்டரி தொழிலாளி வினய் குமார் என்பவருடன் ஹரிணிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது..
ஒருகட்டத்தில் அபிநந்தனின் சொத்துகளை அபகரித்து விட வேண்டும் என்று இந்த கள்ளக்காதல் ஜோடி முடிவு செய்துள்து.. இதற்காகவே கொலை திட்டத்தையும் தீட்டியுள்ளது.. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்வதற்கான நாள் குறிக்கப்பட்டது.. இரவு 10 மணிக்கு வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஹரிணி ஆப் செய்தார்.
பாத்ரூமில் அப்பாவின் அலறல்
இரவு 11 மணிக்கு தன்னுடைய செல்போனையும் அணைத்துவிட்டு, கொலை செய்வதற்காக வெளியே காத்திருந்த வினய் குமாரை ஹரிணி வீட்டிற்குள் அழைத்தார். அப்போது பாத்ரூமில் இருந்த அபிநந்தனின் தலையை சுவற்றில் மோதி, வினய் குமார் கழுத்தை நெரித்தே கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பாத்ரூமிலிருந்து அலறல் சத்தம் கேட்டு, 4 வயது மகன் ஓடிவந்துள்ளான்.. அப்பாவை கொடூரமாக தாக்குவதை பார்த்து அலறியிருக்கிறான்.. இதைப்பார்த்து டென்ஷனான ஹரிணி, சிறுவனை மிரட்டி படுக்கை அறைக்கு அனுப்பி வைத்துள்ளார்..
பிறகு அபிநந்தனின் சடலத்தை படுக்கையில் கிடத்திவிட்டு, சிறுவன் யதுவீரையும் மூச்சுத்திணறடித்து கொன்றுள்ளனர்.. பிறகு சிதறிக்கடந்த ரத்த கறைகளை துணியால் துடைத்து, வீட்டின் பின்புறம் காயப்போட்டுவிட்டு, ஹரிணி தன் செல்போனில் உள்ள அழைப்புகளை அழித்தார்.
போலீசுக்கு வந்த 2 டவுட்
இவ்வளவு ஏற்பாடுகளையும் இரவு முழுவதும் செய்துவிட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு, கணவரும் மகனும் மயங்கிக் கிடப்பதாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கே போன் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்துமே போலீசார், வெளிப்புற கதவு உடைக்கப்படாததை கண்டு சந்தேகப்பட்டனர்.. அதற்கேற்றபடி சிசிடிவியும் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகம் பலமாகி விட்டது.. இதற்கு பிறகுதான், விசாரணை வளையத்துக்குள் ஹரிணியை கொண்டு வந்தார்களாம்..
பிளான்படி, கணவனை மட்டுமே கொல்ல ஹரிணி முடிவு செய்திருந்தாராம்.. மகன் கொலையை பார்த்துவிட்டதால், அவரையும் கொலை செய்ய வேண்டியதாயிற்று என்கிறாராம்.... இந்த நாசமா போன கள்ளக்காதல் இன்னும் எத்தனை பிஞ்சுகளைதான் காவு வாங்க போகிறதோ தெரியவில்லை...!!


Click it and Unblock the Notifications
