தோழியுடன் லாட்ஜில் கள்ளக்காதலன்.. ரூமுக்குள் நுழைந்த காதலியால் ட்விஸ்ட்! கடலூரில் அதுக்கு மேல கொடுமை
சென்னை: இந்தியாவில் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்தபடியே உள்ளன.. உறவு சிக்கல்கள், தகாத உறவுகளினால் ஏற்படும் வன்முறைகளில் சம்பந்தப்பட்ட தம்பதியினரின் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள்.. நாமக்கல்லில் நேற்று நடந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தற்கொலையானது அதற்கு மேல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது பெங்களூரு லாட்ஜில்?
ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் - ரேவதி என்ற தம்பதியின் வாழ்வில் குறுக்கே நுழைந்தார் சுமிதா என்ற பெண்.. இந்த கள்ளக்காதல் விவகாரம் மனைவி ரேவதிக்கு தெரிந்து கணவரை கண்டித்துள்ளார்..

நொந்து போன கள்ளக்காதல் ஜோடி
இதனால் நொந்துப்போன கள்ளக்காதல் ஜோடியோ, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, கோவையிலிந்து சேலத்திற்கு பஸ் ஏறியிருக்கிறார்கள்.. நேற்று குமாரபாளையம் அருகே சாப்பிடுவதற்காக பஸ்ஸை நிறுத்தியபோதுதான், கள்ளக்காதல் ஜோடி மயங்கி விழுந்து கிடப்பது தெரியவந்தது. உடனே இவர்களை மருத்துவமனையில அனுமதித்தும்கூட, சுமிதாவும், ராஜ்குமாரும் உயிரிழந்துவிட்டனர்..
பெங்களூரு எல்லைப்பகுதியில் யசோதா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.. யசோதாவுக்கு திருமணமாகிவிட்டது.. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆனாலும், அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார் யசோதா.. விஸ்வநாத் ஆடிட்டராக இருப்பவராம்.. கடந்த 9 வருடங்களாகவே இவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது..
பிரியங்கா - விஸ்வநாத்
ஒருநாள் தன்னுடைய நெருங்கிய தோழியான பிரியங்காவை, விஸ்வநாத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் யசோதா.. இதற்கு பிறகு, பிரியங்காவும், விஸ்வநாத்தும் ஒருவருக்கொருவர் செல்போனை பகிர்ந்து கொண்டு, யசோதாவுக்கு தெரியாமல் செல்போனில் பேசி வந்துள்ளனர்.. நாளுக்கு நாள் இவர்களது நட்பு மற்றொரு கள்ளக்காதலாக மாறியது..
ஒருகட்டத்தில் பிரியங்காவிடம் நெருக்கமாகிவிட்டதால், விஸ்வநாத் யசோதாவிடம் முன்புபோல் பேசுவதை குறைத்து கொண்டுள்ளார்.. இது யசோதாவுக்கு சந்தேகத்தையும், வருத்தத்தையும் தந்தது.. பிரியங்காவை அறிமுகம் செய்து வைத்ததிலிருந்துதான், தன்னிடம் விஸ்வநாத் சரியாக பேசுவதில்லை என்பதை உணர்ந்த யசோதா, பிரியங்கா, விஸ்வநாத் இருவரின் நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணிக்கத் துவங்கினார்..
தோழி பிரியங்கா அறிமுகம்
அப்போதுதான் இருவரும் நெருக்கத்தில் இருப்பதையறிந்து ஆத்திரமடைந்தார்.. உடனே விஸ்வநாத்திடம் சென்று, பிரியங்காவுடன் இனிமேல் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று தகராறு செய்துள்ளார்.. எனினும், விஸ்வநாத் யசோதா பேச்சை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், விஸ்வநாத்தும் பிரியங்காவும் பெங்களூருவிலுள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. இந்த விஷயம் யசோதாவுக்கு தெரிந்து, ஆவேசமானார்.. உடனடியாக அந்த லாட்ஜுக்கே கிளம்பி சென்றார் யசோதா..
லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி
அங்கு அறையிலிருந்த 2 பேரிடமும் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. ஆனால் அந்த நேரத்திலும் யசோதாவின் பேச்சை, விஸ்வநாத், பிரியங்கா உதாசீனப்படுத்தியிருக்கிறார்கள்.. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற யசோதா, இருவரையும் லாட்ஜ் ரூமிலேயே வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்.
அப்போதும் யசோதாவுக்கு ஆத்திரம் தீரவில்லை.. இதனால் அங்கிருந்த இன்னொரு ரூமுக்குள் சென்று, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அங்கிருந்த ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்...
இந்த தகவலறிந்து போலீசார் லாட்ஜூக்கு விரைந்து வந்தனர்.. யசோதாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.. தற்போது, விஸ்வநாத், பிரியங்காவிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications