அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ்
சென்னை: "நீச்சல் தெரியாத கடற்படை வீரர்.. அவரை காப்பாற்றுவது ஒரு மீனவர்.. இதுதான் நம்ம தமிழ்நாட்டின் தலைவிதி. இந்த கடலில் இறங்கி மீன்பிடிக்கும் எங்களுக்கு மீன்வளத்துறையிலோ கடற்படையிலோ வேலை கிடையாது. ஏன்? எங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? நாங்கள் எல்லாம் படிக்கவே இல்லையா?" என சுருக் நறுக்கென கேள்வியை கேட்டு தமிழகத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர்தான் காளியம்மாள்.. இன்று பதவி மாறி, தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறார்.
தமிழகத்தையே புரட்டி போட்டது சுனாமி.. அதுதான் காளியம்மாள் வாழ்க்கையையும் புரட்டி போட்டது என்றே சொல்லலாம்.. அப்போது முதல் பொது சமூகத்தில் தன்னை இணைத்து கொண்டார்..

காளியம்மாள் யார்
சாமானிய மக்களின் குரலை தனது வெளிப்படை மற்றும் யதார்த்த பேச்சுகளில் வெளிப்படுத்தி வருபவர்... எளிமையான தோற்றம்! இயல்பான பேச்சு! தெளிவான உச்சரிப்பு! அழுத்தமான கொள்கை! இதுதான் காளியம்மாள்!
நாகப்பட்டினத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண் இவர்.. பிகாம் பட்டதாரியும்கூட... மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். கடலோரப் பெண்களின் பிரச்சனைகளுக்காக சட்ட உதவி மையத்தில் பணியாற்றியவர்.
நாம் தமிழர் கட்சி
எளிய சமுதாயத்தின் இந்த வலிய குரலை கேட்ட சீமான், நாம் தமிழர் கட்சியில் காளியம்மாளுக்கு அரசியல் வாய்ப்பை வழங்கினார்.. நாதகவில் அவருக்கு மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. முதல் மேடை கூட்டத்திலேயே திராவிடமா? தமிழ் தேசியமா என திராவிட கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.
கடந்த 2019 எம்பி தேர்தலில் வடசென்னையில் போட்டியிட்டு, அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக சந்து பொந்தெல்லாம் முழங்கினார்.
"ஒருநாள் வரும்.. உன் அதிகாரம், ஆணவம், அகம்பாவம், எங்களை அழிச்ச அந்த இன வெறி அனைத்தையும் ஓரங்கட்டி உன்னை தெருவுல நிப்பாட்டி உன்னை தரைமட்டத்துக்கு இறக்கி.. மேலே ஏறி எங்க அண்ணனை நிக்க வெக்கலை? வக்கிறேன்டா.. வக்கிறோம்.. நாங்க வேங்கை மகனெல்லாம் கிடையாது.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க" என்று சவால் விட்டு வாக்கு சேகரித்தார் காளியம்மாள். 60,515 வாக்குகளையும் பெற்றார்... இது சதவிகித அடிப்படையில் 6.33 ஆகும்... அதேபோல 2021ல் சட்டப்பேரவை தேர்தலில் 14,823 வாக்குகள் பெற்றார்..
பிரச்சார பீரங்கி
இப்படி ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் பெரிய தாக்கத்தை நாம் தமிழர் கட்சிக்கு காளியம்மாள் ஏற்படுத்தினார்.. சீமானுக்கு அடுத்தபடியான பிரச்சார பீரங்கியாக உயர்ந்தார்.. காளியம்மாளின் எளிமையான தோற்றமும், உறுதியான பேச்சும் மக்களை சீக்கிரமாக ஈர்த்து கொண்டு போனது..
ஆனால் யார் கண்ணு பட்டதோ? கொள்கை முரண்பாடுகள் மற்றும் தலைமை மீது நிலவிய அதிருப்தி காரணமாக காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.. தனக்கான முக்கியத்துவமும் அங்கீகாரமும் முறையாக வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமே அவரது இந்த அரசியல் மாற்றத்திற்கு அடிப்படை காரணமாகும்..
தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.. தனது குடும்ப பின்னணியே அதிமுக சார்ந்தது என்று தெரிவித்துள்ள அவருக்கு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

அதிமுகவில் சர்ப்ரைஸ் பதவி
ஒருவேளை கூட்டணியில் பாமகவிற்கு அந்த தொகுதி ஒதுக்கப்படாத பட்சத்தில் காளியம்மாள் வேட்பாளராக நிறுத்தப்படலாம் அல்லது அவருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்காத சூழலில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீனவர் நல வாரியம் போன்ற முக்கிய வாரியத் தலைவர் பதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
தற்போதைக்கு நட்சத்திர பேச்சாளர்கள் என்று அதிமுகவில் பெரிதாக யாரும் இல்லை.. அந்தவகையில், கணீர்குரலால் மேடைகளில் உணர்ச்சிக் கடலைத் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்ட காளியம்மாள், அதிமுகவின் தொண்டர்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்துவதோடு, தென்மாவட்ட மற்றும் கடலோர மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாகவும் விளங்குவார்.
வலைவீசி மீன்பிடிக்கும் எளிய மீனவ குடியில் பிறந்து, இன்று தமிழக அரசியலின் அலைகளைத் தீர்மானிக்கும் ஆளுமையாக உயர்ந்துள்ள காளியம்மாளின் பயணம், விடாமுயற்சியின் சாட்சியமாகும்.. கடலோரப் பெண்களின் குரலாகவும், விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கையாகவும் உருவெடுத்துள்ள அவர், அதிமுக எனும் பேரியக்கத்திற்கு ஒரு பெரும் வலிமையாக நிகழ்வார் என்றே நம்பப்படுகிறது..!!
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications