வெள்ளை முடி கருப்பாக.. நரைமுடி மறையணுமா? செம்பருத்தி போதுமே.. இந்த 4 இருந்தாலே கருகரு முடி வளரும்
சென்னை: வெள்ளை முடியை கருப்பா மாற்றணுமா? இதற்கு வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே, தீர்வு தேடலாம்.. இதோ ஒரு சில டிப்ஸ்கள்:
இளமையிலேயே தலையில், வெள்ளை முடி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.. முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கக்கூடிய மெலனின் என்ற நிறமி குறைவாக இருப்பதே பிரதான காரணமாகும். பொதுவாக, இந்த மெலனினானது வயது ஆக ஆக, மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் சிறு பிள்ளைகளுக்கும்கூட, வெள்ளை முடி வந்துவிடுகிறது.

இளநரை: அதேபோல, வயிற்றில் நிறைய பித்தம் இருந்தால் இளமையிலேயே வெள்ளை முடி வரலாம். அல்லது மனபாரத்திலும், மனஅழுத்தத்திலும், இருந்தால் நரை முடிவரலாம். அல்லது தலைமுடிக்கு நிறைய ரசாயனங்கள் பயன்படுத்தினாலும், நரை முடி வரலாம்.. அல்லது சுகாதாரமில்லாமல் தலை இருந்தாலும் வெள்ளை முடி வரலாம்.. அல்லது ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் இளமையிலேயே நரைமுடி வரலாம்.
இந்த வெள்ளை முடியை கறுப்பாக மாற்ற வேண்டுமானால், காஃபின் சம்பந்தப்பட்ட உணவை தவிர்த்துவிட்டு, ஆன்டி ஆக்சிடெனட் நிறைந்த கிரீன் டீயை சேர்த்து கொள்ளலாம். தலைமுடிக்கு மருதாணி இலை, செம்பருத்தி இலை, கறிவேப்பிலை இலை, பயன்படுத்தலாம். அதேபோல நெல்லிக்காய், வெந்தயம், வெங்காயம், எலுமிச்சம்பழம், போன்றவற்றையும் பயன்படுத்தி தீர்வு காணலாம்.
கறிவேப்பிலை: இளநரை என்றாலே கறிவேப்பிலைதான் அருமருந்தாகின்றன.. தலைமுடி வளர்ச்சிக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கறிவேப்பிலை.. இந்த கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்..
அல்லது நான்கைந்து இலைகளை கழுவி தினமும் சாப்பிட்டு வந்தாலே பல நன்மைகள் கிடைக்கும். இந்த கறிவேப்பிலையை தூளாக்கி தலையில் தேய்த்து குளித்து வரும்போது, இளநரை மறைய துவங்கி, தலைமுடி கருகருன்னு வளர துவங்குமாம்..
அல்லது தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி, கறிவேப்பிலையை போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் அந்த எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்து வந்தாலும் பலன் கிடைக்கும். அல்லது கறிவேப்பிலை விதையை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து, அந்த எண்ணெய்யை தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காய்: தினம் ஒரு நெல்லிக்காய் உள்ளுக்குள் சாப்பிட்டு வருவதும் பலன்தரும். அதேபோல, நெல்லிக்காய் பவுடருடன், சிறிது எலுமிச்சம் சாறு கலந்து தலையில் அப்ளை செய்து ஊறவிட வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை கழுவி விட வேண்டும். இதனால் தலைமுடி நிறம் மாற துவங்கும்.
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்களில் படும்படி ஊறவைக்க வேண்டும்.. 20 நிமிடம் கழித்து கழுவினாலே, நல்ல ரிசல்ட் கிடைக்கும்.. இதனால், முடிக்கு தேவையான சத்துக்களை இந்த வெங்காயம் வழங்குவதுடன், நிறத்தையும் மாற்ற பயன்படுகிறது.. தலையில் தொற்றுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.
செம்பருத்தி இலை: செம்பருத்தி பூக்கள், செம்பருத்தி இலைகள், இவைகள் இரண்டுமே அபார பலனை தரக்கூடியது. இதனை நன்றாக விழுதுபோல அரைத்து தலைக்கு பூசி ஊறவைத்து கழுவி வரவேண்டும்.. வெங்காயத்தை போலவே, செம்பருத்திக்கும் தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்களை தரக்கூடிய பண்புகள் உள்ளன.
வெந்தயம்: வெந்தயத்தை அரைத்து தினமும் தலையில் நன்கு ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும். தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை ஊற வைத்து தினமும் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
கேரட் ஜூஸ் குடித்து வருவதால், வெள்ளை முடிகள் அதிகமாக வளருவது தடுக்கப்படுகிறதாம்.. அதேபோல, எள்ளு விதைகளை அரைத்து பாதாம் எண்ணெயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனையும் தலையில் தடவி ஊறவைத்து குளித்து வந்தால், வெள்ளை முடி மெல்ல மறைய துவங்குமாம்..!
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications