2 ரூபாய் நோட்டு இருக்கா? வங்கி கணக்கு முடியுதா? கூகுள் பே-வில் பணம் இப்படி போகுதே.. போலீஸ் வார்னிங்
சென்னை: ஆன்லைன் மோசடிகள் குறித்து போலீசார் முக்கிய அலர்ட் ஒன்றை தந்துள்ளனர்.. என்ன நடந்தது? சைபர் கிரைம் போலீசார் எச்சரிப்பதென்ன?
சமீப காலமாகவே ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.. இதனால் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் ஏமாளிகள் பணத்தை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.

பழைய ரூபாய்: சமீபத்தில்கூட, வேலூரில் ஒரு மோசடி நடந்தது.. "பழைய 1, 2, 5 ரூபாய் நாணயங்களுக்கும், பழைய ரூபாய் நோட்டுகளுக்கும், அதன் வருடங்களுக்கு ஏற்றார்போல் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்" என்று விளம்பரம் சோஷியல் மீடியாவில் வந்துள்ளது. இதைப்பார்த்த பிரகாசம் என்பவர், விளம்பரத்திலிருந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு, தன்னிடம் பழைய ரூபாய் நோட்டு இருக்கிறதென்று கூறியிருக்கிறார்.
அதற்கு எதிர்முனையிலிருப்பவர்கள், "அப்படியானால், உங்கள் பழைய ரூபாய்க்கு, 17 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.. ஆனால், 17 லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.. அதனால், வருமானவரித்துறை போன்ற சிக்கல்கள் வரலாம்.. அதிலிருந்து நாங்களே உங்களை காப்பாற்றுகிறோம்" என்றெல்லாம் சொல்லி கிட்டத்தட்ட 1.50 லட்சம் வரை பிரகாசத்திடமிருந்து ஏமாற்றி வாங்கியிருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை 17 லட்சம் ரூபாய் பிரகாசத்துக்கு தரவில்லை. அதற்கு பிறகே நொந்துபோய் போலீசுக்கு போனார் பிரகாசம்.
வங்கி கணக்கு: இதுபோலவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
அதுமட்டுமல்ல, "பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்க வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ஓடிபி கேட்கவே மாட்டார்கள். அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்" என்று காவல்துறையினர் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
மோசடிகள்: எனினும் தொடர் மோசடிகள் ஆன்லைனில் நடந்து வருகின்றன.. அதுவும், கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்படுவது இப்போது தெரிய வந்துள்ளது.
"சார்.. உங்கள் வங்கி கணக்கில் தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள்" என்று சொல்லி கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆன்லைனில் அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை சுருட்டி விடுவதாக போலீசார் எச்சரித்திருக்கிறார்கள்.
சைபர் கிரைம்: இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விடவேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் உங்களை பயன்படுத்தி நிச்சயம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள்" என்று எச்சரித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications