WFH அலப்பறைகள்.. பதற வைத்த இளமதி.. சரத்குமார் பொளேர்.. கொரோனாவை விரட்ட நச் ஐடியா.. படிச்சீங்களா??
சென்னை: உலகெங்கும் கொரோனா பதட்டம். .நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட போகும் பீதி. அதிலும் கொரோனாவை விட அதுகுறித்த தகவல்கள்தான் ரொம்ப பீதியைக் கிளப்புகின்றன. சமூக வலைதளங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் கொரோனா செய்திகள்தான்.
Recommended Video
தமிழகத்திலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இளமதி ஏற்படுத்திய பரபரப்பு நேற்று மேட்டூர் காவல் நிலையத்தில் அடங்கிப் போனது. சாதி மறுப்புத் திருமணம் செய்த அவர் கடத்தப்பட்டதும், பின்னர் அவருக்காக திமுக எம்பி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க, இளமதி எங்க என்று சமூக வலைதளங்கள் கொதித்த நிலையில்.. காவல் நிலையத்திற்கு வந்து பெற்றோருடன் திரும்புவதாக அதிர வைத்தார் இளமதி.

மறுபக்கம் சரத்குமார் போட்ட போடு.. ரஜினியைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டதால் கடுப்பாகி டென்ஷனாகி விட்டார்.. என்ன இருந்தாலும் அவரைப் பற்றிப் பேசாமல் அடுத்தவர் பற்றிப் பேசினால் கோபம் வரத்தானே செய்யும்.
இன்னொரு பக்கம் ரஜினியை வைத்து டிரோல்கள் புற்றீசல் போல பாய்ந்தோடி கொண்டே இருக்கின்றன. கொஞ்சம் கூட இந்த அலை குறையவில்லை.. எழுச்சி குறையவில்லை... உண்மையில் ரஜினியை வைத்து டிரோல்கள்தான் எழுச்சியுடன் ஓடிக் கொண்டுள்ளன.

கேரளாவில் ஒரு அங்கன்வாடி டீச்சர். மதிய உணவை தனது மாணவன் வீட்டுக்கு போய் அவர் கொடுத்த அந்த குட்டிப் பையனை அவர் தூக்கிக் கொண்டு வைத்து பேசிய காட்சி.. கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே வைரலானது.. என்ன சொல்லுங்க, கேரளா கேரளாதான். இப்படி நிறைய சம்பவங்கள் நேற்று.. நீங்க அந்த செய்திகளை படிச்சிருப்பீங்க.. இல்லாட்டி மீண்டும் படிக்க இதோ அந்த இணைப்புகள்.. மறக்காம படிங்க.. Happy Sunday!












Click it and Unblock the Notifications