Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போறீங்களா? பழைய பைக் வாங்கறீங்களா? இந்த சூப்பர் டிப்ஸ் கவனியுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய கார், பழைய பைக்குகளை வாங்க வேண்டி வந்தால், ஒருசில முக்கிய விஷயங்களில் கவனிக்க வேண்டியிருக்கிறது.

பழைய பைக் அல்லது பிறர் பயன்படுத்திய செகண்ட் ஹேண்ட் பைக்குகளை வாங்க வேண்டிவந்தால், முதலில் வண்டி நம்பர், Chassis நம்பர், இந்த பைக்கை இதற்கு முன்பு எத்தனை பேர் வைத்திருந்தார்கள்? அந்தந்த ஊருக்கு ஏற்றவாறு RTN மாறியுள்ளதா? என்பதையெல்லாம் கவனமாக அறிந்து கொள்ள வேண்டும்.

Best Tips to buy a second hand Bike and What are the features to consider while buying used Old cars

பழைய பைக்: ஒரு பைக்கின் விலை, 10 ஆயிரம், 20 ஆயிரம் என்றதுமே பலரும் அதை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.. விலை மலிவாக கிடைக்கிறது என்றபோதே சற்று கவனமாக இருக்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்று வாங்கினாலும், ஒருசில மாதத்திற்குள்ளாகவே மறுபடியும் பைக் பழுதாகிவிடும். இப்படியிருந்தால், வாங்கிய விலையைவிட, இன்னும் அதிகமாகவே செலவு செய்ய வேண்டிவரும்.

எனவே, பைக்குகளை மேலோட்டமாக பார்ப்பதைவிட, ஆவணங்களுக்கு முக்கியத்துவம் தந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.... அதுமட்டுமல்ல, வாகனம் உற்பத்தி செய்யப்பட்ட வருடத்தை பார்த்தாலே, அந்த பைக் எவ்வளவு பழையது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

லோன்: அதேபோல, அந்த பைக்கை லோன் கட்டி வாங்கியிருந்தால், தவணை தொகை முழுவதும் முழுமையாக கட்டப்பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.. மேலும், அந்த வாகனம் மீது போலீஸ் ஸ்டேஷனில் ஏதாவது புகார் இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்வது நல்லது.

அதேபோல, என்னென்ன அபராதம் விதிக்கப்பட்டுள்ளது? என்பதையும் ஆன்லைனில் செக் செய்து கொள்ள வேண்டும்.. ஏனென்றால், வாகனத்தில் ஏதாவது சட்டவிரோதமான செயல்கள் நடந்திருந்தால், அதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் நீங்களே கட்டண வேண்டிய நிலைமை வந்துவிடும்.

சைலென்சர், டயர், பேட்டரி போன்றவை எல்லாம் எப்படியிருக்கின்றன என்பது கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு நேரடியாக தெரியாவிட்டாலும், மெக்கானிக் ஒருவரை உங்களுடன் அழைத்து சென்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

கார்கள்: கார்களும் இதே போலவேத்தான், வெறும் விலையையும், காரின் தோற்றத்தையும் மட்டும் பார்த்து ஒருமுடிவுக்கு வராமல், அந்த காரின் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது அவசியம்..

குறிப்பாக, காருக்குள் இன்டீரியர் பாகங்கள், டயரின் கண்டிஷன் போன்றவை சரிபார்க்க வேண்டும்.. அதைவிட முக்கியமாக, காரின் பராமரிப்பு எத்தனை வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது உட்பட டெஸ்ட் டிரைவ் செய்வதுதான் சிறந்த வழி. அதேபோல, காருக்கான பதிவு சான்று, இன்சூரன்ஸ் இப்படியான ஆவணங்கள், தரவுகள் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

எந்தவகை கார்: ஒரு மாதத்திற்கு 1000 கி.மீ.க்கு மேல் நீங்கள ஓட்டுவீர்கள் என்றால் டீசல் மாடல் காரை வாங்கலாம்... குறைவாகதான் கார் ஓட்டக்கூடிய சூழல் என்றால், பெட்ரோல் கார் பெஸ்ட் என்கிறார்கள்..

ஒருவேளை திருடிய காரை, உங்களிடம் யாராவது உங்கள் தலையில் கட்ட நேர்ந்தால், அதையும் நீங்கள் ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம்.. காரை விற்பவர்களிடம், அதன் அசல் ஆவணங்களின் நகலை கேட்டு வாங்கி பார்த்தாலே தெரிந்துவிடும்.. அல்லது, வட்டார போக்குவரத்து கழகத்திற்கு கொண்டுபோய் சோதித்தும் பார்க்கலாம்..

அதேபோல, அரசுக்கு சொந்தமான பரிவாகன் செயலியும் (parivahan) உள்ளது.. காரின் சேஸ் நம்பர், இஞ்சின் நம்பர் போன்றவற்றை பதிவு செய்தால், காரின் மாடல், காருக்கு எதாவது அபராதம் செலுத்த வேண்டுமா? என்று மொத்த தகவலையும் அறிந்துகொள்ளலாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+