பாட்டி சட்டென வைப்பை ஒரு ஏத்து ஏத்துனாங்க பாருங்க.. அதிர்ந்த மாணவர்கள்.. தரமான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த வேளையில், திடீரென ஒரு பாட்டி சட்டென வைப் ஏற்றி ஒரு ஆட்டம் போட்டார்.. அதை பார்த்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உடன் சேர்ந்து ஆடினார்கள்.. இந்த வீடியோ ட்விட்டரில் தற்போது அதிகம் பரவி வருகிறது.

சமூக வலைதளங்கள் என்பது நாம் நினைப்பதையும் விட வேறு மாதிரியான உலகம். கற்பனை உலகம் அல்ல. ஆனால் கனவுகளுடன் வாழ்பவர்களின் உலகம்.. பலரது கனவுகள், பலரது ஏக்கங்கள், சந்தோஷங்கள், கவலைகளை பகிரும் இடமாக இருக்கிறது.. நண்பர்கள், யார் என்பதை சொல், நீ யார் என்பதை சொல்கிறேன் என்று ஒரு வாக்கியம் உண்டு..

 Best video ever seen, The Vibe She Instantly creates Wow

அதே வாக்கியத்தை இப்போது பேசச்சொன்னால், நீ பேஸ்புக், யூடியூபில் என்ன ரீல்ஸ் பார்க்கிறாய் என்று சொல், நீ யார் என்பதை சொல்கிறேன் என்று கூறியிருப்பார். நாம் பார்க்கும் ரீல்ஸ், வீடியோக்கள் நாம் யார் என்பதை முடிவு செய்யும். இதேபோல் நாம் போடும் பதிவுகள், வீடியோக்கள், ரீல்ஸ்கள் கூட நம் யார், நம் எப்படிப்பட்ட மனநிலையில் இப்போது இருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது.

பலரும் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் பாசிட்டிவ்வான வைப் வீடியோக்கள் வந்தால் ஆர்வமுடன் பார்ப்பதுடன்,, ஷேர் செய்து உற்சாகம் அடைவார்கள்.. தன்னை மட்டுமல்ல, தன் நட்பு வட்டத்தில் உள்ளவர்களும் பார்த்து மகிழும் வகையில் பல வீடியோக்களை ஷேர் செய்கிறார்கள்.. அப்படியான ஒரு வீடியோ தான் இன்று காலை முதல் டிரெண்ட் ஆகி வருகிறது.

கல்லூரி மைதானம் போல் இருக்கிறது. அங்கு ஏராளமான மாணவர்கள், தமிழ் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார்கள்.அப்போது ஒரு பாட்டி திடீரென அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் சட்டென வைப் ஏற்றி வேகமாக நடனம் ஆடுகிறார். உடனே மிகவும் உற்சாகம் ஆன மாணவர்கள் எல்லாவற்றையும் மறந்து வேறெலெவலில் பாட்டியுடன் சேர்ந்து நடனம் ஆடினார்கள்.

மாணவர்களுக்கு இணையாக பாட்டியும் நடனம் ஆடினார். வச்சிக்குத்தி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில என்று கூறுவார்களே.. அப்படித்தான் வத்திக்குச்சி போல் பாட்டி பற்ற வைத்த வைப் தான் மொத்த கல்லூரி மாணவர்கள் கூட்டத்தையும் எழுந்து நடனமாட வைத்தது.. வீடியோ வேறலெவலில் இருப்பதால் டிரெண்ட் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+