தப்பித்தவறி கூகுளில் இதை மட்டும் தேடிடாதீங்க.. அப்புறம் அக்கவுண்டில் 10 பைசா மிஞ்சாது.. என்னென்ன?
சென்னை: இணையதள வாயிலாக நடைபெறும் மோசடிகள் அதிகரித்துவிட்ட இன்றைய கால கட்டத்தில் கூகுளில் நாம் தேடும் விஷயங்கள் மூலமாகவே வலை விரித்து கைவரிசை காட்ட ஹேக்கர்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே கூகுளில் எந்த விஷயங்களை தேடக்கூடாது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
தொழில் நுட்பம் அபரிமிதமாக வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களையே காண்பது அரிதாகிவிட்டது. அதுவும் இன்றைய தலைமுறையினருக்கு எந்த ஒரு விஷயத்தில் டவுட் வந்தாலும் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூட பலரும் நினைப்பது இல்லை. உடனே கூகுளில் சென்று அந்த விஷயத்தை தேடி தகவல்களை தெரிந்து கொள்கின்றனர். இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீங்கும் இல்லாமல் இல்லை.

குறிப்பாக கூகுளில் தேடுவதை வைத்தே பல ஹேக்கர்களும் மோசடியாளர்களும் குறிப்பிட்ட நபரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப விஷயங்களை வைத்து அவர்களை ஏமாற்ற முற்படுகின்றனர். அதிலும் தற்போது வங்கி பரிவர்த்தனைகளை பெரும்பாலானோர் வங்கிகளின் செயலி மூலமாக பயன்படுத்துவதால், ஸ்கேமர்கள், மக்கள் கொஞ்சம் அசந்தாலும் பணத்தை அலேக்காக சுருட்டி விடுகின்றனர்.
குறிப்பாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து அதை கிளிக் செய்தால் மொத்த போனையும் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு நமக்கே தெரியாமல் வங்கியில் இருந்து பணத்தை எடுக்கும் அளவுக்கு கூட சைபர்ஹேக்கர்கள் வளர்ந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், தான் கூகுளில் சில விஷயங்களை தேடுவதை தவிர்ப்பது நல்லது என்று அத்துறை வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள். அதில் முக்கியமாக கூகுளில் நாம் தேடக்கூடாத டாப் 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-
1. ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க சில வழிகள் இருந்தாலும் கூகுளில் இதை நாம் தேடினால் பெரும்பாலும் மோசடி வெப்சைட்கள் தான் முதலில் நம் கண் முன் வந்து நிற்கும். குறிப்பாக பார்டைம் ஜாப், ரிமோட் வொர்க் என்றும் லட்சங்களில் சம்பளம் என கவர்ந்திழுக்கும் வகையில் வாசகங்களை கண்டால் ஆளை விடுங்கடா சாமி... என கும்பிடு போட்டு வந்து விடுங்கள்.
ஏனெனில் இவற்றில் பெரும்பாலானவை போலியானவைதான்.. உள்ளே சென்று அவர்கள் கேட்கும் விவரங்களை பார்த்தால் அக்கவுண்டில் கடைசியில் ஜீரோதான் மிஞ்ச வாய்ப்பு உள்ளது. ஒருவேளை உண்மையான ஜாப் ஆக இருந்தாலும் கூட கொஞ்சம் சந்தேகத்துடனே அணுகுவது நல்லது.
2.கஸ்டமர் கேர் நம்பர்: கூகுளில் மிக முக்கியமாக தேடக்கூடாத விஷயங்களில் ஒன்று டெக் சப்போர்ட்/ கஸ்டமர் கேர் நம்பர் ஆகும். வங்கிகளின் கஸ்டமர் கேர் நம்பர்களையோ அமேசான், பிளிப்கார்ட், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கஸ்டமர் கேர் சப்போர்ட் எண்களை கூகுளில் தேடக்கூடாது. இந்த எண்கள் தேவைப்படும் பட்சத்தில் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் போய் பார்த்துக்கொள்ளலாம்.
3.free people finder - அதேபோல இணையதளத்தில் தெரிந்தவர்களின் விவரங்கள் வேண்டும் என்றால் இதுபோன்ற ஃப்ரீ பீயூப்பிள் ஃபைண்டர்கள் என கூகுளில் தேடுவதை தவிர்க்கலாம்.
தொழில் நிறுவனங்களின் தொடர்புகள் மற்றும் பழைய நண்பரை பற்றிய விவரங்கள் வேண்டும் என்றால் பொதுவெளியில் கிடைக்கும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் கிடைக்கிறதா என பார்க்கலாம். அதை விட்டு விட்டு கூகுளில் தேடுவது நமது பர்சுக்கும் உலை வைக்கலாம்.
4. கிரிப்டோ கரன்சி: நான்காவதாக கிரிப்டோ கரன்சி சார்ந்த விஷயங்களை கையாளும் போது மிக கவனமாக இருப்பது அவசியம். கிரிப்டோ வேலட்களில் 12 முதல் 14 ரேண்டம் வார்த்தைகளை கொண்ட 'seed phrase' இருக்கும் அதை பயன்படுத்துவதால் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.
5.கிரெடிட் ஸ்கோர்: ஒவ்வொருவரின் நிதி அந்தஸ்தை தெரிந்து கொள்வதற்கு கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கை முக்கியமானதாக உள்ளது. கடன் கொடுக்கும் நிறுவனங்கள் முதலில் இதை அறிந்து கொண்டே பிறகு அடுத்த வேலையை தொடங்குகின்றன. எனவே, கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்ள பலரும் இணையத்தில் தேடுவதுண்டு. ஆனால், கூகுளில் பொத்தாம் பொதுவாக தேடினால் மோசடி வலையில் விழ வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் அங்கீரிக்கப்பட்ட கிரெடிட் பியூரோ நிறுவனங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications