வண்ணாந்துறை கண்ணணுக்கு எதிராக 10 வயதில் பரணியின் சபதம்.. அடையாறு ரீல்ஸ் சம்பவத்தின் நிஜ பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த கண்ணனுக்கு எதிராக 10 வயது சிறுவன் ஒருவன் எடுத்த சபதமும், அதற்காக தன் வயது நண்பர்களுடன் சேர்ந்து போட்ட திட்டமும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் 'புதுப்பேட்டை', 'வட சென்னை' திரைப்படங்களைத் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சினிமாவை மிஞ்சும் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த 45 வயதாகும் கண்ணன் என்பவர், ஐடி நிறுவனங்களுக்குக் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். முதலில் அதிமுக வட்டச் செயலாளராக இருந்து வந்த வண்ணான்துறை கண்ணன், சட்டமன்றத் தேர்தலின் போது த.வெ.க-வில் இணைந்தார். இவர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இரவு 9.30 மணி அளவில் வண்ணான்துறை ராமசாமி அவென்யூ எல்லையம்மன் கோவில் தெருவில் தனது நண்பர்கள் 4 பேருடன் பேசிக்கொண்டிருந்தார்.

Bharani s vow at age 10 against Vannanthurai Kannan The real backstory behind the Adyar incident

சுற்றி வளைக்கப்பட்ட கண்ணன்

அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணனைச் சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியது. பயந்து ஓட முயன்றபோது அவர் கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரும் சுற்றி வளைத்து வெட்டிக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் கண்ணனைக் காப்பாற்ற முயற்சித்த அவரது நண்பர்கள், பெரிய கற்களை எடுத்து கொலைக் கும்பல் மீது வீசினார்கள்.

அப்போது கொலையாளிகளில் இருவர், வேகமாகப் பட்டாக் கத்தியுடன் ஓடிவந்து வெட்ட முயன்றனர். இதனால் அவர்கள் உயிர்ப்பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அந்த கும்பல் கண்ணனை பலமுறை வெட்டியது. அவரது உயிர் பிரிந்த பின்னரும் ஆத்திரம் தீராமல் வெட்டினர். கொலையாளிகள் சென்றவுடன் கண்ணனின் நண்பர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கண்ணன் பிணமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர்.


விரைந்த தனிப்படை

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கண்ணனின் சித்தி மகனான 44 வயதாகும் புருஷோத்தமன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் அடையாறு துணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி காட்டிக் கொடுத்தது

கண்ணன் கொலை செய்யப்பட்ட காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. அந்தக் கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைப் காவலர்கள் தேடினர். அவர்களைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டது. இரவோடு இரவாகக் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கொலைக் கும்பலைப் பிடித்தனர்.

துப்பாக்கி முனையில் கைது

அவர்கள் காவலர்களால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த பரணி (20), கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (20), திருவான்மியூர் பெரியார் நகரைச் சேர்ந்த நரேன் (20), இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (23), கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது.


என்ன காரணம்

கொலையான வண்ணான்துறை கண்ணன், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார். இந்த வழக்கில் கைதான 20 வயதாகும் பரணியின் பெரியப்பா சிவனை கடந்த 2009-ம் ஆண்டு கண்ணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கை நடத்தி வந்த பரணியின் தந்தை வேலுவையும் கடந்த 2016-ம் ஆண்டு ஊராட்சியிடைப் பகுதியில் வண்ணான்துறை கண்ணன் கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது.

10 வயது சபதம்

தனது தந்தை மற்றும் பெரியப்பா கொலைக்குப் பழிக்குப் பழியாக 2016-ம் ஆண்டு, 10 வயதில் சபதம் எடுத்த பரணி, பழிவாங்கக் காத்திருந்துள்ளார். பரணியிடம் அவரது குடும்பத்தினரே தந்தை மற்றும் பெரியப்பா கொலையைப் பற்றி அடிக்கடி சொல்லி, அவரது மனதில் கொலைவெறியை ஊட்டி வளர்த்து வந்துள்ளனர். இதனால் பரணியும் வளர்ந்தவுடன் கண்ணனைப் பழித்தீர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளார்.

வண்ணான்துறை கண்ணன் அசுர வளர்ச்சி

இதனிடையே வண்ணான்துறை கண்ணன் இந்த இடைப்பட்ட 10 வருட காலத்தில் ஐடி நிறுவனங்களுக்குக் கார்களை ஒப்பந்த அடிப்படையில் விடும் தொழில் மூலம் செல்வாக்கான நபராக மாறியுள்ளார். அதேபோல் அரசியலில் இறங்கி அதிமுகவில் வட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். படிப்படியாக வளர்ந்தவர், சட்டமன்றத் தேர்தலின் போது த.வெ.க-வில் இணைந்துள்ளார். த.வெ.க-வில் இணைந்த பின்னர், பகுதியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அடிக்கடி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அன்னதானம் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதனை 'ரீல்ஸ்' ஆகவும் தினமும் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் த.வெ.க-வில் செல்வாக்கான நபராக வண்ணான்துறை கண்ணன் வளர்வதைப் பார்த்ததும், பரணிக்கு ஆத்திரம் அதிகரித்துள்ளது.

பரணிக்கு ஆத்திரம்

இதற்குமேல் இவரை வளரவிடக் கூடாது என முடிவு செய்த பரணி, கண்ணனின் நடமாட்டத்தை ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளார். அப்போதுதான் கண்ணன் தினமும் இரவு நேரத்தில் வண்ணான்துறை ராமசாமி அவென்யூ எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசுவதை நோட்டமிட்டுள்ளார். ஆள் நடமாட்டம் குறைந்த இந்தச் சமயம்தான் சரியான நேரம் என்று திட்டம் போட்டு கண்ணனைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நடந்தது போல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி அன்று மாலையில் பெரம்பூரில் தான் கட்டி வந்த புதிய வீட்டின் அருகே 9 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதே பாணியில் இந்தக் கொலைச் சம்பவமும் நடந்துள்ளது. அப்போது ஆம்ஸ்ட்ராங் தப்பி ஓடாமல் இருக்க அவரது காலை முதலில் வெட்டினார்கள். கொலை செய்ய முயன்றவர்களை அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் கற்களை வீசி விரட்டினார்கள். ஆனால் அந்த கும்பல் அவர்களை ஆயுதத்தைக் காட்டி மிரட்டிக் கொலை செய்தது. அதேபோல்தான் வண்ணான்துறை கண்ணனையும் தப்பி ஓடாமல் இருக்க முதலில் காலைக் குறிவைத்து வெட்டியுள்ளனர். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட அதே பாணியில் கண்ணனையும் கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+