தமிழகத்தில் சூடுபிடிக்கும் பந்த்.. கடைகள் அடைப்பு.. வங்கிகள் இயங்கவில்லை.. ஸ்தம்பித்தது!
நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தற்போது தமிழகத்திலும் நடந்து வருகிறது.
சென்னை: நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தற்போது தமிழகத்திலும் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வங்கிப் பணிகள், தனியார் பேருந்துகள் முடங்கி உள்ளது.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி, குஜராத், மேற்கு வங்கம் என்று அனைத்து மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடக்கிறது
இந்த போராட்டம் தமிழகத்திலும் நடந்து வருகிறது . தமிழகம் முழுவதும் இருக்கும் 10 தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி துறைமுக பகுதியில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கதிதினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எத்தனை பேர்
அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி பேர் பங்கேற்று உள்ளனர். இதனால் தமிழகத்தில் வங்கி பணிகள் மொத்தமாக முடங்கி உள்ளது. அரசு சார் நிறுவனங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

ஆனால்
ஆனால் காலை 10 மணிக்கு மேல் ஆட்டோக்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்தை சுற்றி எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவால் அரசுபேருந்துகள் நள்ளிரவு 12 மணி முதல் இயங்கவில்லை.

எல்லை எப்படி
தமிழகத்தில் பேருந்துகள் இயங்கி வருகிறது. ஆனால் கேரளா செல்லும் பேருந்துகள் மட்டும் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

நிலை என்ன
தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 90% கடைகள் திறக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறது. தமிழகம் முழுக்க இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான பேருந்துகள், டெம்போக்கள் ஓடவில்லை.
இந்த போராட்டம் காரணமாக பெரிய அளவில் இழப்புகள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications