மனோஜை காண சேத்துப்பட்டு இல்லத்திற்கு சென்ற பாரதிராஜா! இறுக்கமான முகத்தில் தாளாத புத்திர சோகம்!
சென்னை: மகன் மனோஜ் இறந்த செய்தி கேட்டு அவரத உடலை காண சேத்துப்பட்டில் இருக்கும் வீட்டிற்கு தாளாத சோகத்துடன் சென்றார் பாரதிராஜா. சிம்ஸ் மருத்துவமனையில் இருந்து மனோஜின் உடல் ஆம்புலன்ஸில் வந்தது.
இயக்குநர் பாரதிராஜா பல்வேறு ஹீரோ ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் எல்லாம் டாப் ஸ்டார்களாக உள்ளனர். ஆனால் தனது மகனுக்கு ஏனோ அந்த அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.

தனது படமான தாஜ்மகால் படத்தில் மகன் மனோஜை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகளே வந்தன. இந்த நிலையில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்த மனோஜுக்கு இதயத்தில் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது.
இதற்காக கடந்த மாதம் அவருக்கு சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு உடல் நலம் தேறியதும் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மனோஜின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இதனால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகனின் இறப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாரதிராஜாவை சில இயக்குநர்கள் மனோஜ் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
காரில் வந்த பாரதிராஜா முகமெல்லாம் தாளாத சோகத்துடன் காட்சியளித்தார். அதிர்ச்சியில் இருந்து மீளாத வகையில் அவர் முகத்தில் அத்தனை சோகம் ததும்பியது. புத்திர சோகம் என்பது மிகவும் கொடியது. தனது ஒரே மகனை இழந்துவிட்ட பாரதிராஜா இந்த துக்க சம்பவத்தில் இருந்து மீண்டு வர அவருக்கு கடவுள் மனவலிமையை கொடுக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
மனோஜ் இறப்புக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எனது நண்பன் பாரதியின் மகனான மனோஜ் குமார் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ந சொல்வது , எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம். நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக் கொள்ள முடியாது என்று காலம் விதித்து இருப்பதால் மனோஜின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications