Bharathiraja health: மீண்டும் ஐசியூ வார்டில் பாரதிராஜா! இப்போது எப்படி இருக்கிறார்? மருத்துவமனை விளக்கம்!
சென்னை: இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடல்நிலை பயப்படும் அளவுக்கு இல்லை எனவும், சீராக இருப்பதாகவும் கூறியதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழ் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாரதிராஜா. கிராமத்து கதைகளை நிஜ வாழ்க்கையைப் போல திரைபடமாக்கி, தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு புதிய போக்கை உருவாக்கியவர் என்ற பெருமை அவருக்குள்ளது.
நடிகர், நடிகைகள் பலரையும் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர் என்றும் அவர் பெரிதும் பாராட்டப்படுகிறார். அதற்காகவே அவர் "இயக்குநர் இமயம்" என்று அழைக்கப்படுகிறார். பல தசாப்தங்களாக தமிழ்ச் சினிமாவில் பணியாற்றி வருபவர்.

இயக்குனர் பாரதிராஜா
16 வயதினிலே, முதல் மரியாதை, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். இயக்குநராக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், பாரதிராஜாவின் உடல்நிலை குறித்த தகவல் ஒன்று நேற்று இரவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாரதிராஜா உடல்நிலை
திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டதால் உடனடியாக குடும்பத்தினர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாரதிராஜா தற்போது 80 வயதுக்கு மேல் ஆகும் நிலையில், வயது மூப்பு காரணமாக சில மாதங்களாகவே அவர் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதமும் உடல் நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
மனோஜ் பாரதிராஜா
இதற்கிடையில் கடந்த ஆண்டு அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய துயரம், அவரது மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணம் தான். அந்த இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் அவர் மன உளைச்சலுடன் இருந்ததாக நெருங்கியவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலைமையில் மீண்டும் உடல்நலப் பிரச்னை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியதும், ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினர் மத்தியில் கவலை ஏற்பட்டது.
மருத்துவமனை விளக்கம்
சமூக ஊடகங்களில் பாரதிராஜா விரைவில் நலம் பெற வேண்டும் என்ற வாழ்த்துகள் பலரும் பகிர ஆரம்பித்தனர். இந்நிலையில் தான், பாரதிராஜாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், பாரதிராஜாவின் உடல்நிலை தற்போது சீராகி வருவதாகவும், தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும். மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடல்நலன் குறித்து பயப்பட வேண்டிய அவசர நிலை எதுவும் இல்லை. உடல்நிலை ஸ்திரமாக உள்ளது" என்று கூறியுள்ளது.
ரசிகர்கள் நிம்மதி
இதனால் பதற்றத்தில் இருந்த அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாரதிராஜா முழுமையாக குணமடைந்து மீண்டும் சினிமா துறையில் சுறுசுறுப்பாக செயல்படும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications