பவதாரிணியும் சபரியும் பிரிந்திருந்தார்களா? சிகிச்சைக்காக இலங்கைக்கே போகவில்லையா? உண்மை என்ன?
சென்னை: இளையராஜா மகள் பவதாரிணிக்கும் அவருடைய கணவர் சபரிக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதா? உண்மை என்ன?
இளையராஜா மகள் பவதாரிணி 1984 ஆம் ஆண்டு மை டியர் குட்டிசாத்தான் என்ற மலையாள படத்தில் பாடியிருந்தார். இதையடுத்து என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, தென்றல் சுடும், அஞ்சலி, சேதுபடி ஐபிஎஸ், ராசையா உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.

இந்த படத்தில் அவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ஹிட்டடித்தது. இதைத் தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் பாடிய நிலையில் பாரதி படத்தில் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதை பெற்றார்.
இவர் பல்வேறு இசைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார். இந்த நிலையில் பவதாரிணிக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு சிகிச்சை எடுத்த நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்தது, வயிற்று வலியும் அதிகரித்தது.
இதையடுத்து அவர் ஆயுர்வேத வைத்தியரின் ஆலோசனையின் பேரில் அங்குள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சற்று உடல்நலம் தேறி ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 25 ஆம் ஆண்டு சென்னைக்கு தனது கணவருடன் திரும்ப இருந்தார்.
இந்த நிலையில் பவதாரிணிக்கு திடீரென மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் லங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார்.
சிறிய வயதில் இன்னும் சாதனைகளை புரியவிருந்த நிலையில் அவருடைய இறப்பு என்பது அவருடைய ரசிகர்களை புரட்டி போட்டுவிட்டது. பவதாரிணியின் கடைசி காலத்தில் அவருடைய கணவர் சபரி அவரை நன்றாக பார்த்து கொண்ட போதிலும் ஏற்கெனவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஜெயந்தி கண்ணப்பன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உண்மையில் பவதாரிணியும் சபரியும் பிரியவில்லை. பவதாரணி இலங்கைக்கு செல்லவில்லை என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அதற்கான விளக்கத்தை அவர்கள் கொடுக்க வேண்டும் என்ற தேவையும் ஏற்படவில்லை.
அவர்கள் ஆத்மார்த்த தம்பதிகளாக இருந்தார்கள். இன்று சபரி பெரிய துக்கத்தில் இருக்கிறார். எல்லோரும் மாதிரியும் மிகவும் ஓப்பனாக அழுது எமோஷனை அவருக்கு காண்பிக்கத் தெரியாது. ஆனால் சபரி அப்படி இல்லை. பவதாரணியின் இறப்பு செய்தியை கேட்டு அப்படியே சபரி உறைந்து போயுள்ளார்.
பவதாரிணி திருமணமான பின்னர் சபரியுடன் தான் இருந்தார். இவர்கள் இருவரும் தேவையில்லாமல் இளையராஜா வீட்டிற்கு வருவதே கிடையாது. சபரி, பவதாரிணியை விட்டுக் கொடுக்கவே மாட்டார். இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த சபரியை பவதாரிணி திருமணம் செய்து கொண்டார். பவதாரிணிக்காக அவருடைய தாய் ஜீவா நிறைய வரன்களை பார்த்துள்ளார். ஆனால் செங்கல்பட்டில் கன்னி கோயிலில் பிரார்த்தனைக்கு பிறகு சபரியின் வரன் கிடைத்து இருவரின் ஜாதகமும் பொருந்தி திருமணம் நடந்தது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications