Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொட்டு தாங்க இல்லை.. ஆனா பூஜையெல்லாம் இருக்கு! நாளை தவெக மாநாட்டுக்கு பூமி பூஜை! ’தளபதி’ வர்றாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நாளை (அக்டோபர் 2ம் தேதி) நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதிக அளவில் தொண்டர்களும் திரள்வார்கள் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

tvk manadu tamilaga vetri kazhagam actor vijay

இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.

இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போயுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி கடந்துவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

தற்போது மாநாட்டுக்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று புஸ்ஸி ஆன்ந்த் மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாட்டுக்கு தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நாளை நடைபெற இருக்கிறது. மாநாட்டு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் என பல்வேறு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் நாளையே அவற்றை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்க இருக்கிறது.

மாநாட்டுக்கு இன்னும் 25 நாட்கள் இடையில் இருக்கும் நிலையில் பணிகள் எந்தவித தொய்வும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே உடனடியாக பணிகளை துவக்குவதாக கூறி இருக்கின்றனர் தவெக நிர்வாகிகள். பூமி பூஜை நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்வார் என கூறப்பட்டாலும் நடிகர் விஜய் கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜயை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் போலீஸ் பாதுகாக்கும் கோரப்பட்டு இருக்கிறது. ஆனால் விஜய் கலந்து கொள்வது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+