உலமாக்களுக்கு சைக்கிள்! ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகை! முதல்வர் தொடங்கி வைத்த சூப்பர் திட்டங்கள்!
சென்னை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதேபோல் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கும் நடைமுறையையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

10,583 உலமாக்களுக்கு
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மிதிவண்டிகளை வழங்கினார்.

ஹஜ் மானியத் தொகை
மேலும், 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத் தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628/- வீதம், மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

யார் யார் பங்கேற்பு
வெள்ளிக்கிழமை என்பதால் நண்பகல் சிறப்பு தொழுகைக்கு இஸ்லாமியர்கள் செல்வார்கள் என்பதை அறிந்து காலதாமதமின்றி காலை 11 மணிக்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனிடையே தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாவட்ட அளவில்
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவில் உரிய பயனாளிகளுக்கு மிதி வண்டி மற்றும் ஹஜ் மானியத் தொகை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் உரிய பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications