அங்க போயிடாதீங்க.. வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு.. அப்போ சென்னையில் எந்தெந்த ரூட்டில் போகலாம்?
சென்னை: சென்னையில் கனமழை பெய்ததையடுத்து, சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.. இதையடுத்து, எந்த சாலைகளில் செல்லலாம்? என்பது குறித்த விவரங்களை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து இல்லை என்றாலும், பெரிய மழை விடாமல் செய்யும் என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் நேற்று முன்தினம் முதலே மழை கொட்டி வருகிறது.. இதனால், சென்னையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளும் விடாமல் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் போக்குவரத்தின் நிலை என்ன? எந்தெந்த சாலைகளில் மக்கள் தடையின்றி சென்று வரலாம்? என்பது பற்றிய
சுரங்கப்பாதை: மழைநீர் தேங்கி உள்ளதன் காரணமாக மூடப்பட்டு உள்ள சுரங்கபாதைகள்: பெரம்பூர் ரயில்வே, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், மேட்லி போன்ற சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்து மெதுவாக செல்லும் சாலைகளின் விவரம்:
MMDA ரசாக் கார்டன், போகன் வில்லா, மெட்டுக்குளம், நெற்குன்றம், K10 சந்தை, 70 அடி பெரவள்ளூர் பிஎஸ் சாலை, ஏசிரோடு புளியந்தோப்பு, ஸ்ட் ரெஹான்ஸ் சாலை, PH சாலை, ஆஞ்சநேயர் கோயில், மேட்டுப்பாளையம், தானா தெரு, அழகப்பா சாலை, ராஜா அண்ணாமலை சாலை, ரித்தர்டன் சாலை, ஈவேரா சாலை, குருசாமி பாலம், மில்லர்ஸ் சாலை, கொன்னூர் உயர்சாலை, ஷைலாம் தெரு, பி.எஸ்.சிவசாமி சாலை, நீலகிரி பாயிண்ட்(சிவசாமி சாலை நோக்கி), சுதந்திர தினபூங்கா முதல் நாகாஸ்,டாங்க் பங்க் சாலை, ஸ்டெர்ல்லிங் சாலை, ஹேடர்ஸ் U டர்ன் NH KH, பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி, பனகல் பார்க், வாணி மஹால், நாயர் சாலை, காளிம்மாள்கோயில் ரெட்டி தெரு, ஆர்டிஓ பாயிண்ட்(ஒருவழி பாதை), SRP டூல்ஸ், எம்ஜிஆர்சாலை, கந்தஞ்சாவடி.
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகள்:
- மேட்லி சுரங்கப்பாதை(தெற்கு)-கண்ணம்மாபேட்டை-முத்துரங்கன் சாலை-17அடி சாலை-ரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
- பெரம்பூர் சுரங்கப்பாதை(வடக்கு)-முரசொலி மாறன் பாலம்
- சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் (தெற்கு)- வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் இருந்து நாகாஸ் நோக்கி வரும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லூரிக்கு திருப்பி விடப்படும்.
- அமிர்தாஞ்சன் சந்திப்பு P.S.சிவசாமி சாலையை நோக்கி செல்லும் வாகனம் அனுமதிக்கப்படவில்லை. அமிர்தாஞ்சன் சந்திப்பு-லஸ் சர்ச் சாலை-இடது- டிஸ்லிவா சாலை-Dr.RK சாலை.
- P.S.சிவசாமி சாலை வட்டத்தில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்கு வாகனம் அனுமதிக்கப்படவில்லை.
- தீயணைப்புத்துறை 'E' ரோடு 'B' ரோடு வழியாக மேட்டுக்குப்பத்துக்கு இடையே இருபுறமும் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பெரம்பூர் பேரக் சாலையில இருந்து ரித்தர்டன் சாலையை நோக்கி செல்லும் வாகனம் அனுமதிக்கப்படவில்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைய ஈவிகே சம்பத் சாலை வழியாக செல்லலாம்.
- பெரம்பூர் பேரக் சாலையில் இருந்து ஈவிஆர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி, புரசைவாக்கம் சாலை வழியாக ஈவிஆர் சாலை அடையலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications