பிரபஞ்சத்தின் தோற்றமே கேள்விக்குறியாகுதே! விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அதிர வைத்த ஒரு தியரி.. ட்விஸ்ட்
சென்னை: விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நினைத்ததை விட நமது பிரபஞ்சம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்கலாம், நமது மொத்த பிரபஞ்சம் தோன்றியதாக இதுவரை விண்வெளி அறிஞர்கள் வைத்திருந்த கணக்கு தவறாக இருக்கலாம் என்ற தியரி ஒன்று விண்வெளி உலகில் எழுந்துள்ளது.
அறிவியல் அறிஞர்களின் கொள்கையின்படி நாம் வாழும் பிரபஞ்சம் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது ஆகும். பெருவெடிப்பிற்கு பின் இந்த பிரபஞ்சம் உருவானது. இதை பற்றி ஆராயவே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணிற்கு அனுப்பப்பட்டது.

உலகம் முழுக்க பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட வெளியிடப்பட்டது. பல லட்சம் விண்மீன் மண்டலம், நட்சத்திரங்கள், கிரகங்களை படம் பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி உள்ளது
நாசா மற்றும் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கனடா ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த The James Webb Space Telescope (JWST) ஐ உருவாக்கி உள்ளது. Ariane flight VA256 ராக்கெட் மூலம் கடந்த 2021 வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் இந்த தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டது.
பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை இதன் மூலம் ஆரைய முடியும். உலகம் தோன்றியது எப்படி என்று இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். எப்படி என்கிறீர்களா?உலகம் தோன்றிய தொடக்க காலத்தில் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்த நட்சத்திரங்கள், கிரகங்களிடம் இருந்து வெளியான ஒளிகள் இப்போதும் பல மில்லியன் ஒளி ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கும். இவற்றைதான் படம் பிடித்து ஜேம்ஸ் வெப் அனுப்ப முடியும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்க கூடியது.
உலகின் தொடக்க காலத்தில் இருந்த பல கேலக்ஸிகளை கண்டுபிடிக்கவும் இது உதவும். அகச்சிவப்பு கதிர்கள் என்பதால் இதன் இமேஜ் துல்லியமாக இருக்கும். இந்த நிலையில்தான் உலகம் முழுக்க பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல லட்சம் விண்மீன் மண்டலம், நட்சத்திரங்கள், கிரகங்களை படம் பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி உள்ளது
பூமியில் இருந்து அதிகபட்சம் 1,500,000 km தூரத்தில் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பூமியில் இருந்து இது இருக்கும் குறைந்தபட்ச தொலைவே 374,000 km தூரம் ஆகும். இது முதல் முதலாக 13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன் உருவான முதல் பிரபஞ்ச கூட்டத்தில் இருந்து வெளியான ஒளியைத்தான் இந்த ஜேம்ஸ் வெப் படம் பிடித்துள்ளது. அதாவது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பிரபஞ்ச கூட்டத்தில் இருந்து வந்த போட்டான் துகள்கள் இவ்வளவு காலம் பயணித்து இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு கதிர்களில் படிந்து படமாகி உள்ளது.
அதாவது பெருவெடிப்பிற்குப்பின் 400 - 500 மில்லியன் ஆண்டுகள் கழித்து பிரபஞ்சங்கள் உருவான போது குட்டியாக.. குழந்தையாக பிறந்த நட்சத்திரங்கள், நட்சத்திர தொகுப்புகள் அதாவது கேலக்சிகளின் புகைப்படங்களை இந்த ஜேம்ஸ் வெப் வெளியிட்டது. இந்த நிலையில்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நினைத்ததை விட நமது பிரபஞ்சம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்கலாம், நமது மொத்த பிரபஞ்சம் தோன்றியதாக இதுவரை விண்வெளி அறிஞர்கள் வைத்திருந்த கணக்கு தவறாக இருக்கலாம் என்ற தியரி ஒன்று விண்வெளி உலகில் எழுந்துள்ளது.
அதன்படி பெருவெடிப்பு.. அதாவது பிக் பேங் 26.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் என்ற தியரி வெளியாகி உள்ளது. இது பிரபஞ்சத்தின் உண்மையான வயதை நாம் நினைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக்கும். Monthly Notices of the Royal Astronomical Society என்ற ஆய்வு நாளிதழில்தான் இந்த ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது. அதாவது நாம் நினைத்த 13 பில்லியன் ஆண்டுகளுக்கு பதிலாக 26 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உதாரணமாக தற்போது ஜேம்ஸ் வெப் எடுக்கும் பிரபஞ்ச புகைப்படங்களில் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் இளமையான நட்சத்திரமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஜேம்ஸ் வெப் பதிவு செய்வது பிரபஞ்சத்தின் தொடக்க காலம் என்பதால்.. அந்த நட்சத்திரங்கள் எல்லாம் புதிதாக இருக்கும் என்பதையோ எளிதாக யூகிக்க முடியும். அதாவது ஜேம்ஸ் வெப் பதிவு செய்யும் 13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நட்சத்திரங்கள்.. அப்போது மிகவும் இளமையாக இருந்திருக்கும். ஜேம்ஸ் வெப்பும் முதலில் இளமையான கேலக்சிகளின் புகைப்படங்களைத்தான் அனுப்பியது. ஏனென்றால் அப்போதுதான் கேலக்சிகளே உருவாக தொடங்கியதால் கண்டிப்பாக இவை புதியதாகவே இருக்கும். புதியது என்பதை அதன் ஒளியை வைத்து கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் இப்போது ஜேம்ஸ் வெப் அனுப்பி இருக்கும் சில புகைப்படங்கள் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. பெயரிடப்படாத கேலக்சிகளின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் அனுப்பி உள்ளது. இதில் உள்ள நட்சத்திரங்கள் முதுமை அடைந்து, நட்சத்திரங்கள் அதிக நெருக்கமாக காணப்படுகிறது. நமது பால்வழி போல மிகவும் பெரிதாக காணப்படுகிறது. இதனால் பெருவெடிப்பு நாம் நினைத்ததைவிட முன்பே ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications