திமிறிய ஷிவானி.. ஆதரவு கரம் நீட்டிய வெறும் 3 பேர்.. உறைந்து போன ரசிகர்கள்.. இது பிக்பாஸ் கூத்து!
சென்னை: கேப்டன் போட்டியில் வெறும் 3 ஓட்டுக்கள் மட்டுமே ஷிவானிக்கு விழுந்த அந்த அதிர்ச்சியில் இருந்து அவரது ரசிகர்கள் எழவே இல்லை.
பிக்பாஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.. எந்த சீசனும் போல் இல்லாமல் இந்த சீசனிலேயே விறுவிறுப்பு 2-ம் நாளே ஆரம்பித்துவிட்டது. தினமும் ஒளிபரப்பாகும் புரோமோவும் பரபரப்பை கூட்டி வந்து, பிக்பாஸ் அல்லாத ரசிகர்களையும் தன்பக்கம் இழுத்து வந்து கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரம் ஆன நிலையில், கமல் வழக்கம்போல் வந்து அரசியல் நெடியை தெறிக்க விட்டு சென்றார்.. வீட்டின் கடந்த வாரம் கேப்டனாக ரம்யா பாண்டியனை, நேரடியாகவே பிக்பாஸ் அறிவித்திருந்தார்.. எனவே, அடுத்த வாரத்திற்கான அதாவது இந்த வாரத்துக்கான கேப்டன் போட்டி தேர்வானது.. அதில், ஷிவானிக்கு வெறும் 3 ஓட்டுக்கள் மட்டுமே விழுந்தது.
அப்போது ஷிவானி பெயரை கமல் சொன்னதும், வெறும் 3 பேர்கள் மட்டுமே கையை தூக்கி உள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி பெயரை சொன்னதுமே எடுத்த எடுப்பிலேயே 6 பேர் கையை தூக்கிவிட்டனர்.. இதை பார்த்த கமல், ஓட்டு போடும்போது யோசித்து ஓட்டு போடுங்க, ஓட்டு போட்ட பிறகு வருத்தப்படக் கூடாது என்று சொல்லும் புரோமோ நேற்றெல்லாம் டிரெண்டிங் ஆனது.. ஆனால், ஷிவானி பெயரை கமல் சொன்னதுமே வெறும் 3 பேர் மட்டுமே கையை தூக்கினர்.. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே ஷிவானிக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.. இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களும் லட்சக்கணக்கில் உள்ளனர்.. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டில் ஷிவானி அணியும் டிரஸ்களையும், மேக்கப்பையும், இளசு கூட்டம் ஒன்று பெரிதும் ரசித்து பார்க்கும்.
இந்த வாரம் ஷிவானிக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. ஆரம்பத்தில் சற்று கெத்து காட்டி வந்த ஷிவானிக்கும் கொஞ்சம் ஷாக்தான்.. காரணம், வீட்டில் அவர் யாருடனும் சரியாக பேசுவதில்லை, பழகுவதில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது.. இதை ஷிவானியே ஒத்துக் கொண்டிருந்தாலும், நேற்று அவரது முகம் சற்று வாட்டத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கத்தான் செய்தது.. அதனால், சோஷியல் மீடியாவில் ஷிவானி ரசிகர்கள் வெறித்தனமாக ஆதரவு கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications