நீ என்ன சாதி?.. செருப்படி பதில் கொடுத்த பிக் பாஸ் ரித்விகா
சாதி குறித்து கேட்டவர்களுக்கு பிக்பாஸ் ரித்விகா பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: "நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!
ரித்விகா!! ஆடம்பரம் இல்லாத எளிய முகம். இவரை பார்க்கும்போதெல்லாம் நம்ம வீட்டு பெண்ணை பார்ப்பது போன்றே ஒரு உணர்வு!சில படங்களே நடித்தாலும் அத்தனையும் பேசப்பட்ட படங்களே.
எனினும் நடிகையாகவே அறியப்பட்ட ரித்விகா, பிக்பாஸ் மூலம் அதிக புகழுக்கு சென்றார். இதற்கு காரணம், தன் யதார்த்த இயல்பும், யாரையும் நோகடிக்காத பண்பும், விட்டுக்கொடுத்துப் போன பண்பும்தான்.

அவமானங்கள்
நிறைய இன ரீதியான அவமானங்களையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா சந்திக்க தவறவில்லை. ஆனாலும் பொறுமை என்ற ஆயுதத்தை கடைசி நாள் டைட்டில் வாங்கும்வரை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தார்.

பகிரங்க விமர்சனம்
ஆனால் இந்த டைட்டிலை ரித்விகா பெற்றவுடன், அதற்கும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. சிலர் ரித்விகா என்ன சாதி என்றும், குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் பிக்பாஸ் டைட்டில் கிடைத்துள்ளது என்றும் இணையத்தில் பகிரங்கமாகவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

கண்டுபுடிச்சுக்கோங்கடா
இந்த சாதி மிருகங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு ட்வீட் போட்டு பதிலடி தந்துள்ளார் ரித்விகா. தனது ட்விட்டரில், "
"ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா.." என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

சரியான சவுக்கடி
என்ன சாதி என்று கேட்டு கேட்டு குடைந்தவர்களுக்கு ரித்விகாவின் இந்த சவுக்கடி போதுமா என்று தெரியாது.
ஆனால் இப்படிப்பட்ட சாதிய மிருகங்களுக்கு இதுதான் பதில் என்று மட்டும் நன்றாக தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications