டோட்டலா "நிறம்" மாறுதே.. திரும்பி பார்க்கும் திமுக.. எடப்பாடி பழனிசாமி "சேலஞ்ச்" ஒர்க் அவுட் ஆகிறதா
ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமியின் டீமில் அறிவுரை சொல்லப்பட்டுள்ளதாம்சென்னை: ஓபிஎஸ்ஸின் அரசியல் தற்போது நிறம் மாற துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.. இதற்கு 2 விதமான காரணங்களும் சொல்லப்படுகின்றன.
சென்னை: ஓபிஎஸ்ஸின் அரசியல் தற்போது நிறம் மாற துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.. இதற்கு 2 விதமான காரணங்களும் சொல்லப்படுகின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தபோது, ஓபிஎஸ் மீது வீசப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, திமுகவுடன் அவர் நெருக்கமாக இருக்கிறார் என்பதுதான்.
ஸ்டாலின் ரூமுக்குள் நுழைந்த ஓபிஎஸ் மகன், முதல்வரை புகழ்ந்து பேசி, ஆட்சி குறித்து பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்ததை, தங்கள் ஆயுதமாக கையில் எடுத்தது எடப்பாடி தரப்பு.. இதற்கு பிறகுதான், ஓபிஎஸ்ஸையே திமுகவின் B டீம் என்று நேரடியாகவே குற்றஞ்சாட்ட துவங்கினர்.

டீல் சீக்ரெட்
திமுகவுடன் உறவு வைத்துகொண்டு அதிமுகவை அழிப்பதாக எடப்பாடி சொல்ல ஆரம்பித்தார்... இந்த 6 மாத காலமாகவே, எடப்பாடி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஓபிஎஸ் நேரடியாக பதில் சொல்லவில்லை.. அமைதி காத்தார்.. அவருக்கு பதிலாக, மருது அழகுராஜ் போன்றவர்கள் பதிலடிகளை தந்தபோதும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டை அதிகரித்து போனார்.. அதனால்தான் கடந்த வாரம், பொறுமையிழந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவாலை விடுத்தார்.. "முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதை நிரூபிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயாரா?" என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார்..

பச்சோந்தி
எப்போதுமே மென்மைப்போக்கை கடைப்பிடித்து வருபவர் ஓபிஎஸ்.. டென்ஷனில் பலமுறை ஓபிஎஸ்ஸை மரியாதைக்குறைவாக எடப்பாடி பேசியதுண்டு.. பச்சோந்தி என்பது முதல் பல தடித்த வார்த்தைகளை உபயோகித்ததும் உண்டு. ஆனால், ஓபிஎஸ் அதற்கெல்லாம் ரியாக்ட் செய்வதில்லை.. இதுவரை கண்ணியம் தவறிய வார்த்தைகளால் விமர்சித்ததும் கிடையாது.. முதல்முறையாக ஒரு நேரடி சவாலை எடப்பாடிக்கு விடுத்தார் ஓபிஎஸ்.. இதற்கு எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவென்று இதுவரை தெரியவில்லை.. இந்த மாதிரியான ஒரு சூழலில்தான், ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி டீம், பதில் சவாலை விடுத்தது..

கருணாநிதி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் மாஜி அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசியபோது, "ஓபிஎஸ்ஸுக்கு ஒரு சவால்.. சட்டசபையில் ஒரே ஒரு நாள், "தீய சக்தி கருணாநிதி" என்று, ஒரே ஒரு முறை மட்டும், ஓபிஎஸ் சொன்னால் போதும்.. அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பதவி வழங்க நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்" என்றார்.. சவாலுக்கு, பதில் சவாலாக உதயகுமாரின் இந்த பேச்சு பார்க்கப்பட்டாலும், இதற்கு பின்னால் பலமான அரசியல் உள்ளதாக சொல்கிறார்கள்..

95% சப்போர்ட்
பொதுவாக, திமுகவை யார் அதிகம் விமர்சிக்கிறார்களோ, யார் அதிகம் எதிர்க்கிறார்களோ, அவர்களைதான் தங்களுக்கான தலைவராக, ரத்தத்தின் ரத்தங்கள் ஏற்பார்கள் என்பது அதிமுக வரலாறின் தொடர் ஃபார்முலா ஆகும்.. ஆனால், இதில் ஓபிஎஸ் தோற்றுவிட்டதாகவே தெரிகிறது.. இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, ஓபிஎஸ்ஸின் மென்மை போக்கு, அதிமுக தரப்பை அளவுக்கு அதிகமாகவே எரிச்சலுக்கு உள்ளாக்கிவிட்டதாக தெரிகிறது.. அதனால்தான் இந்த ஒரு விஷயத்தை காரணம் காட்டியே, 95 சதவீத நிர்வாகிகளை, தன்பக்கம் இழுக்க எடப்பாடியால் முடிந்தது என்கிறார்கள்..

டச்
நேற்றுமுன்தினம் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் துளியும் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. இதனால் ஓபிஎஸ் கூடாரம் மேலும் அதிர்ந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் 2 விதமான மூவ்களை ஓபிஎஸ் முன்னெடுத்துள்ளாராம்.. முதலாவதாக மக்களை, குறிப்பாக தொண்டர்களிடம் "டச்" வைத்து கொண்டே இருப்பது, அவர்களுடன் தன் மீதான நியாயத்தை எடுத்து வைப்பதுடன், எடப்பாடி பழனிசாமிக்கான பதிலடிகளை சொல்வது என்று முடிவெடுத்துள்ளாராம்.. அமைதியாக இருந்து ஒதுங்கி இருப்பதால், மேலும் ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்பதாலும், லைம்லைட்டில் இருந்துக் கொண்டே பதிலடிகளை சொல்வது, எடப்பாடி டீமுக்கும் ஒரு ஜெர்க் கொடுத்த மாதிரியும் என்பதாலும்தான், இப்படி ஒரு முடிவெடுத்தாராம்.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications