Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நிறம்" மாறுதே: ஸ்டாலின் ரூமில் ஓபிஆர், கலைஞரை புகழ்ந்த ஓபிஎஸ்.. திமுகவிடம் சாயும் எடப்பாடி: சேலஞ்ச்

ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமியின் டீமின் உதயகுமார் ஒரு முக்கிய சவாலை விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஒரு செக் வைத்தால், ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி டீம் இன்னொரு செக் வைத்துள்ளது.. 2 தரப்புமே இந்த சவால்களை முறிடியப்பார்களா? என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தபோது, ஓபிஎஸ் மீது வீசப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, திமுகவுடன் அவர் நெருக்கமாக இருக்கிறார் என்பதுதான்.

ஸ்டாலின் ரூமுக்குள் ஓபிஎஸ் மகன் நுழைந்து, அவரை சந்தித்து பேசி, ஆட்சி குறித்து பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்ததை, முதன்முதலில் எடப்பாடி தரப்பு கையில் எடுத்தது.. அதற்கு பிறகு, ஓபிஎஸ்ஸையே நேரடியாகவே குற்றஞ்சாட்டியது..

சீக்ரெட் உறவு

சீக்ரெட் உறவு

திமுகவுடன் உறவு வைத்துகொண்டு அதிமுகவை அழிப்பதாக எடப்பாடி சொல்ல ஆரம்பித்தார்.. இதற்கு ஓபிஎஸ் தரப்பும் பதிலடி சொன்னது. முக்கியமாக நம் ஒன் இந்தியா தமிழுக்கு, மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் போன்றோர் ஸ்பெஷல் பேட்டிகளை தனித்தனியாக தந்திருந்தனர்.. அப்போது இவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமிக்குதான் திமுகவுடன் நெருக்கம் அதிகமாக உள்ளது என்றார்கள்.

சூத்திரதாரி

சூத்திரதாரி

நம்மிடம் அழகு மருதுராஜ் பேசும்போது, "அதிமுக உடைவதால் திமுகவுக்குதானே சாதகம்? திமுகவில் தேர்தல் பிரச்சாரத்தில், முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்? கொடநாடு கொலைக்கு சூத்திரதாரி, குற்றவாளி எடப்பாடிதான்.. எங்களிடம் அனைத்து ஆதாரமும் இருக்கிறது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 30 நாளில் அவரது முகமூடியை கிழித்து, குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என்று சொன்னார்களா இல்லையா? ஒன்றரை வருடமாகிறது.. குற்றவாளிகள் அடையாளம் காட்டிய எடப்பாடியின் இடதும், வலதுமான சேலம் இளங்கோவனை இன்றுவரை விசாரிக்கவில்லையே ஏன்?

பேரிகாட்

பேரிகாட்

அன்றைக்கு உள்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடியை அழைத்து, கொடநாடு பேரிகாட் ஏன் நீக்கப்பட்டது? நடக்கிற கொலைகள் எல்லாம் சேலத்தை சுற்றியே நடக்கிறதே? 20 வருடமாக வைத்திருந்த மாவட்ட செயலாளர் பதவியை இளங்கோவவனுக்கு தர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இத்தனை சந்தேகங்கள் இருக்கும்போது, ஏன் இதுவரை எடப்பாடியிடம் விசாரணை நடக்கவில்லை? ஸ்மார்ட் சிட்டியில் 2 லட்சம் டன் நிலக்கரியை காணோம் என்று செந்தில்பாலாஜி சொன்னாரே.. இப்போ அந்த பேச்சையே காணோமே ஏன்?" என்று நிறைய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

 4800+

4800+

அதேபோல, கேசி பழனிசாமி பேசும்போதும், "அரசியலையும் கடந்து பிற தலைவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள எம்ஜிஆர் எங்களுக்கு கற்று தந்துள்ளார்.. அதன்படி ஒரு திருமண விழாவில் திமுக தரப்பை சந்தித்து பேசியதற்கு ஏஜெண்ட் என்று என்னை கொச்சைப்படுத்தி சொல்வதா? அப்படி பார்த்தால், திமுகவுடன் எடப்பாடி பழனிசாமிதான் மிகவும் நெருக்கமாகி வருகிறார்.. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசு எடப்பாடியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன டீல்? நெடுஞ்சாலை துறை ஊழல் 4800 கோடி ரூபாய் வழக்கில் ஏன் எடப்பாடியை திமுக அரசு கைது செய்யவில்லை? இப்படி நான் கேட்கலாம்தானே" என்று சீறியிருந்தார்.

பச்சோந்தி

பச்சோந்தி

ஆனாலும், இவைகள் எந்த குற்றச்சாட்டுக்கும் எடப்பாடி தரப்பு பதிலளிக்கவில்லை.. அதனால்தான் கடந்த வாரம், பொறுமையிழந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவாலை விடுத்தார்.. "முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதை நிரூபிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயாரா?" என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.. எப்போதுமே மென்மைப்போக்கை கடைப்பிடித்து வருபவர் ஓபிஎஸ்.. டென்ஷனில் பலமுறை ஓபிஎஸ்ஸை மரியாதைக்குறைவாக எடப்பாடி பேசியதுண்டு.. பச்சோந்தி என்பது முதல் பல தடித்த வார்த்தைகளை உபயோகித்ததும் உண்டு.

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

ஆனால், ஓபிஎஸ் அதற்கெல்லாம் ரியாக்ட் செய்வதில்லை.. இதுவரை கண்ணியம் தவறிய வார்த்தைகளால் விமர்சித்ததும் கிடையாது.. முதல்முறையாக ஒரு நேரடி சவாலை எடப்பாடிக்கு விடுத்தார் ஓபிஎஸ்.. இதற்கு எடப்பாடியின் ரியாக்‌ஷன் என்னவென்று இதுவரை தெரியவில்லை.. இந்த மாதிரியான ஒரு சூழலில்தான், ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி டீம் ஒரு சவால் விடுத்துள்ளது.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் மாஜி அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசியுள்ளார்..

 கலர் சேஞ்ச்

கலர் சேஞ்ச்

அப்போது, "எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பதில் போட்டி நடக்கிறது.. ஓபிஎஸ்‍ஸுக்கு ஒரு சவால்.. சட்டசபையில் ஒரே ஒரு நாள், "தீய சக்தி கருணாநிதி" என்று, ஒரே ஒரு முறை மட்டும், ஓபிஎஸ் சொன்னால் போதும்.. அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பதவி வழங்க நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார். உதயகுமாரின் இந்த பேச்சுதான் அதிமுக கூடாரத்தில் மிகுந்த பரபரப்பை கூட்டி வருகிறது.. திமுகவை யார் அதிகம் விமர்சிக்கிறார்களோ, யார் அதிகம் எதிர்க்கிறார்களோ, அவர்களைதான் தங்களுக்கான தலைவராக, ரத்தத்தின் ரத்தங்கள் ஏற்பார்கள் என்பது தமிழக அரசியலின் தொடர் வரலாறு..

 நிறம் மாறுமோ

நிறம் மாறுமோ

அந்தவகையில், இந்த சவாலை ஓபிஎஸ் ஏற்பாரா? தீயசக்தி கருணாநிதி என்று சொல்வாரா என தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ் ஏற்கனவே விடுத்த சவாலுக்கு எடப்பாடி தரப்பில் இருந்து இதுவரை பதிலும் இல்லை.. உண்மையிலேயே திமுகவுடன் இவர்களில் யார் நெருக்கமாக இருக்கிறார்கள்? அதுவும் தெரியவில்லை.. ஆனால், நடப்பதையெல்லாம், சைலண்ட்டாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்ற கட்சி.

ஹைலைட்

ஹைலைட்

இதனிடையே, பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாத நிலையில், ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இத்தனைக்கும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி உள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் தென்மண்டலவாசிகளை வியக்கவைத்து வருகிறதாம்.. பசும்பொன்னுக்கு செல்வதுடன், தன்னுடன் தேவர் குருபூஜையில் பங்கேற்க இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலையும் முறைப்படி வெளியிட்டு அதிரடி காட்டி உள்ளது ஹைலைட்டாக பார்க்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+